பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க வி ைத

தன்னை மறந்து திரியலாம். ஆனால், அந்த மலர்க் கூட்டத் தைக் கிளறிப் பார்த்தால், அதில் எத்தனை எருக்கம் பூக்களும் கலந்திருக்கின்றன என்பதை உணர அவர்கள் கொஞ்சம் திருவுளம் வைக்க வேண்டும்.

கம்பனுடைய காம்பீரியமும், ஜயங்கொண்டாள் சப்த ஜால விசித்திரமும், முத்தொள்ளாயிர ஆசிரியரின் அநாயாசமான முத்தாய்ப்புக்களும் படைத்த கவிஞர்கள் தமிழ் நாட்டில் இப்போது இல்லை யென்றாலும், ஒன்றிரண்டு நல்ல கவிஞர்களும் இருக்கத்தான் செய் கிறார்கள்.

பழகு தமிழில் கவிதை தந்த பூ.சாரதியை இன்று தமிழகம் வானுயரப் போற்றுகிறது. உண்மையில் பாரதியிடம் கம்பனைப்போன்ற அநாயாசமான காம்பீரியம் இல்லா, விட்டாலுங் கூ..., சிறந்த கவிதைத் தன்மை நிறைந்து இருக்கிறது. பாரதியைச் சோற்றுப் பானைக்குள் அடைக்க விரும்பும் பாரதியின் நெருங்கிய தோழர்களின் பிரசாரம் சோற்றுப் பிரச்னை தீரும் வரையிலும்தான் நிலைத்து நிற்கும் என்பதை உணரவேண்டும், ஆனால் பாரதியின் ஜீவிதம் அவருடைய தேசியப் பாடல்களில் மட்டுமே அடங்கியதல்ல. ஆனால், மனிதனின் நித்ய குணங்களை, அடிப்படையான மனோ தருமத்தை ஒட்டிப் பாடியுள்ள குயில், கண்ணன் பாட்டு முதலியவை தான் பாரதிக்குக் கவிஞர் கூட்டத்தில் நிரந்தர ஸ்தானம் தேடிக் கொடுக்க வேண்டும். பாரதி தனது தேசியப் பாடல்களின் மூலம் அதிகப் புகழ் பெற்றிருந்தாலுங்கூட, 'அவருடைய அமரத் தன்மை குயில், பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு முதலியவற்றில்தான் அடங்கியிருக்கிறது. ' பாரதியைத் தமிழர்கள் போற்றத்தால் அவருடைய குயிலும் தமிழ்