பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி கப் க்ர 2,

கவி முதலிய பாடல்கள் குறிப்பிடத்தக்கவை. இவரு டை..ய முதல் தொகுதிக்குப் பின் வந்த நூல்கள் இலக்கண வரம்புக்குட்பட்ட வசனக் கட்டிடமா கவே அமைந்து விட்டன.

புதுவையோகியார் ஓர் எந்திரம், இம்மென்றல் இருநூறும், அம்மென்றல் ஆயிரமும் எழுதிய புலவர்கள் கூட, அவரிடம் தலை குனியவேண்டும். கவிதை என்பது இவருக்குக் கைவராத சரக்கு. பாட.5பின் தொகை ஆவகுக் குக் கடல் போல விரிந்தும், கவித்துவத்தின் ஆழம் உடப்பங் கழியின் அளவுதான்.

ச. து. சு யோகியாரிடம் நல்ல கவித்துவம் இருக்கிறது. ஆனால் அவர் மற்றவர்களைப்போல் பிரபலம் அடை யாததற்குக் காரணங்கள் உண்டு. அவற்றைக் கூறுவது கசப்புக்கு இடந்தரும். கம்பனின் காவியத்தைப் படித்து உரமேறிய காரணத்தாலோ என்னவோ, கம்பனின் பாணி வைக் கைப்பற்ற முயன்று, வெற்றிகரமாகப் பின்வாங்கு கிறார். கவியுருவம் கம்பனைப்போன்ற விருத்தங்களில் அமைத்தாலும், காம்பீரியம் மிகக் குறைவுதான் ; எனினும் செழுமை உண்டு. திக்கித் திணராத நல்ல பாடல்கள். மக்தலேனா: அகல்யை புடிக்க உகந்தவை.

நாமக்கல்லார் தேசியத்தின் பேரால், கவியென்று மகுடாபிஷேகம் பண்ணப்பட்டவர். இவரிடம் சாதாரண கவித்துவம் இருந்தாலும், பாட்டு அமைப்பில் திக்கித் திணறுகிறார். சாதாரண மக்களை மகிழ்விக்கும் பண்டாரப் பாட்டுகள் எழுதியிருக்கிறார். உவர்த்த கவித்துவ மென் பதை இவரிடம் என்றும் காண 1pடியவில்லை. இவ ருடைய காவியம் இவருடைய வறட்சிக்கு எடுத்துக்காட்டு.