பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறிஞ்சி வளம்

49

வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே நின்றேன்.

"என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்?" என்று ஹரன் கேட்டார். இன்ப மதுவை உண்டவனைப் போல அவருக்கு நான் காட்சியளித்திருக்க வேண்டும்.

எதிரே சூரியன் தன் எழிற்சோதியினால் உலக முழுவதற்கும் மெருகு ஏற்றிக்கொண்டிருந்தான். கிடு கிடு பாதாளமும், மிகமிக உயர்ந்த மலைக் காடுகளும் கண்ணுக்கு விளக்கமாகத் தெரிந்தன. மலையின்மேலே தோட்டங்கள் அடர்த்தியாகத் தெரிந்தன. மலையைச் சுற்றிச் சுற்றி ஏறவும் இறங்கவும் அமைந்த சாலையைப் பார்த்தேன்.

"இராத்திரி இந்தச் சாலை வழியாகவா வந்தோம்?" என்று கேட்டேன்.

"ஆம்; இங்கே சாலைகள் முதல்தரமானவை. நம்முடைய சாரதியும் மிகவும் கெட்டிக்காரன்" என்றார் நண்பர் கணேஷ்.

எதிரே சூரியனையும் மலைத்தொடரையும் பார்த்தேன். “அதோ பாருங்கள். அழகுத் தெய்வம் கோயில் கொண்டிருக்கிற கோலத்தைப் பாருங்கள். முருகன் திருவுருவம் இதுதான். நக்கீரர் இப்படிப்பட்ட காட்சிகளை யெல்லாம் பார்த்து மனம் நெகிழ்ந்து தான் திருமுருகாற்றுப்படையைப் பாடியிருக்கிறார். சங்க நூல்களிலே குறிஞ்சி நிலத்தைப்பற்றிப் புலவர்கள் எவ்வளவு அழகாக வருணித்திருக்கிறார்கள்! அவற்றின் பொருள் எனக்கு இப்போதுதான் விளங்கு

4