பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

53

பெருமான் இப்போதைய இலங்கைப் பிரஜா உரிமை விதிகளின் கீழ்ப் பதிவு செய்து கொள்ள முடியாது. ஏனெனில், அவர் வள்ளி, தேவயானை ஆகிய இரண்டு பத்தினிகளையும் இரண்டு கண்களாக வைத்துக் கொண்டிருப்பவர் அல்லவா?

ஆகவே, முருகன் இலங்கையின் பிரஜை ஆக முடியாது. இரண்டு மனைவிகள் உள்ளவர் யாருமே இலங்கைப் பிரஜையாக முடியாது. ஒருத்தியை மனைவி என்றும், இன்னொருத்தியை வேறு ஏதாவது பெயர் சொல்லியும் அழைத்தால் புகழ்பெற்ற இலங்கையின் பிரஜையாகலாம்/ இருவரையும் மனைவிமார் என்று அழைத்தால் அது சாத்தியமில்லை.

இருதார மணத்தைப் பற்றி என்னுடைய அபிப்பிராயம் எதிரிடையானதுதான். ஒரு தார மணங்கூட அவ்வளவு புத்திசாலித்தனமானது என்று நான் சொல்ல முடியாது. ஒரு தடவை, ஏதோ போனால் போகிறது என்று மன்னித்து விடலாம். இரண்டாந் தடவையும் ஒரு தவறைச் செய்தால் அதை யார்தான் சரி என்று ஒத்துக் கொள்ள முடியும்?

ஆகவே, இருதார மணத்தை நான் அவ்வளவாக விரும்புகிறவன் அல்ல. ஆனாலும், இந்தக் காரணத்தைக்கொண்டு அநேக ஆயிரம் இந்தியர்களுக்குப் பிரஜா உரிமை இல்லையென்று அடித்து விடுவதாயிருந்தால், அதை எப்படி நியாயம் என்று ஒத்துக் கொள்ள முடியும்? இலங்கையில் ஏற்பட்டிருக்கும் இரு தாரப் பிரச்னையின் இரகசியம் இது தான். தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யப் போன இந்தியத் தொழிலாளிகளில் பலர் ஒரு மனைவிக்கு மேலே கலியாணம் செய்துகொண்-