பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

43



விளங்கும் என்பதை இன்று காலை நானும் தோழர் தங்கப்பழமும் ஒரு தோட்டத்தைச் சுற்றிப் பார்த்த போதே அறிந்துகொண்டோம்.

நூறு பிள்ளைகளுக்கு ஒரு ஆசிரியர். நூறு ஆடுகளை மேய்க்கக்கூட ஒரு இடையன் போதாது. ஆனால் ஆடுகளைவிட மக்கள் அறிவுடையவர்கள் என்ற காரணத்தால் அதட்டியவுடனே பயப்பட, கைகாட்டிய பக்கம் உட்காரச் செய்வதற்கு ஒரு ஆசிரியர் போதாதா என்று தோட்ட முதலாளிகள் நினைந்திருக்கக்கூடும். இந்த நிலையில் அவர்கள் கல்வியின் பொதுவான உயர்வையறிந்து, அதற்குமேல் தங்கள் தாய்மொழியான தமிழின் உயர்வை எங்ஙணம் காணமுடியும். தமிழ் மொழியின் பெருமை உலகமதிப்பீட்டில் பங்கு பெற்ற அளவு தமிழன் எங்கே உயர்வடைந்திருக்கிறான்! மற்ற எந்த மொழிக்கும் இல்லாத சங்கங்கள் தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம் அமைத்து அதில் வளர்க்கப்பட்டதுதான் தமிழ் Tamil will flourish itself without the aid of any other Languages, மற்ற எந்த மொழியின் உதவியுமில்லாமல் தனித்தியங்கும் ஆற்றலுடையது தமிழ்' என்று கால்டுவெல் போன்ற பேரறிஞர்களால் போற்றப்பட்டதுதான் தமிழ். இலக்கண இலக்கியச் சுவையில் மிகக் கீர்த்தி வாய்ந்ததுதான் தமிழ். நினைத்ததை நினைத்தவாறே சொல்லும் ஆற்றலும் அழகும்படைத்ததுதான் தமிழ். எழுவாய் பயனிலை, செயப்படு பொருள்களை முன்னுக்குப் பின் மாற்றிச் சொல்லவேண்டிய வேலையில்லாமல் அதை அதை அவ்வதற்குறியதான இடத்திலே அமைத்து அழகுபட பேசும் ஆற்றலுடையதுதான் தமிழ். தமிழ் எப்போது தோன்றியது, யாரால் தோற்றுவிக்கப்பட்டது. அதன் வயதென்ன என்று இன்றுவரை பல் தமிழ்ப் பேரறிஞர்