பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

இலங்கை எதிரொலி


தில் கும்பகர்னனுக்கும் இராவணனுக்கும் ஏற்பட்ட சகோதர வாஞ்சையைப்பற்றி எண்ணவாரில்லை. எடுத்துப் பேசுவாருமில்லை. போகட்டும் இவ்வளவு ஒற்றுமையாக இருந்த சகோதரர்களிடம் நடந்ததென்ன.

மாரீசன் மாய மானாக வந்தான். விரும்பினாள் சீதை. பின் தொடர்ந்தான் இராமன். தனியே இருந்தான் இலக்குமணன், குடிசையின் வெளியே; உள்ளே இருந்தாள் சீதை, நெடுநேரம் காணாத இராமனைத் தேடப்போ என்கிறாள் சீதை. இலக்குமணன் அங்கேயே நிற்கிறான். இலக்குமணன் பார்வையில் சந்தேகப்பட்டாள் சீதை. பச்சையாகச் சொல்லிவிட்டாள்! பதறிய இலக்குமணன் தன் முன்னோன் நடந்த வழி நடந்தான். இங்கே கெட்ட எண்ணம் இலக்குமணனுக்கு வந்ததா இல்லையா என்பதல்ல நமது ஆராய்ச்சி. ஒரே குலத்தில் பிறந்த இவர்களிடையே இந்த சந்தேகங்கள் எழும்புகிறதே என்பதை எண்ணும்போது, இதற்குப் பெயர் சகோதர வாஞ்சையா என்பதையும் நாம் சிந்தித்தாக வேண்டும்.

அடுத்தது இராமன் ஒரு தன்னம்பிக்கையற்றவன், சந்தேகி, சுய சிந்தனையில்லாதவன். அவன் கண்களில் சாந்தம் இல்லை. சந்தேகந்தான் குடிகொண்டிருந்தது என்பது நம்முடைய குற்றச் சாட்டல்ல, கம்பனின் எழுத்தாணியின் குற்றச்சாட்டு.

இராவணனால் தூக்கிச் செல்லப்பட்ட சீதையை மீட்டுக்கொண்டு வந்தபிறகு, அவளுடைய தூய்மையை அறிய தீ குளிக்கச் சொல்கிறான். அப்படியே செய்து தன் தூய்மையை நிலை நாட்டுகிறாள். உன்னை