பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


போர்வாள்


திருச்சியிலே! அதற்கு அடுத்தகிழமை நாம் கூடினோம். அங்கே ராஜகோலாகலர்கள் இல்லை! மிட்டாமிராசுகளும், ஜெமீன் ஜரிகைக் குல்லாய்களும் இல்லை! மாநாட்டுப்பந்தலிலே, வந்திருந்த தாய்மார்களின் தங்கக் கட்டிகள் தூங்குவதற்கு ஏணைகள் கட்டிவிடப்பட்டன! கொலுவீற்றிருக்கும் ராஜா கொடுத்த 2000-த்துக்காக, அவருடைய கோணல் சேட்டையைச்சகித்துக் கொண்டிருந்தனர் காங்கிரசில்- இங்கோ, அழுகிற குழந்தையை முத்தமிட்டுச் சத்தம் வெளிவராதபடி தடுத்த தாய்மார்களைக் கண்டோம்; பெருமையும் பூரிப்பும் கொண்டோம். நாட்டுப்பற்றுக்கு நாயகர் என்று கூறிடுவோர், அங்கு ஓட்டுவேட்டைக்கான ஓங்காரச் சத்தமிட்டனர்- இங்கோ, நலிந்து கிடக்கும் இனத்துக்கு நல்லதோர் மூலிகை தேடிடும் நற்காரியத்தில் ஈடுபட்டோம். அங்கு அரசாளவழிகண்டனர்! அங்குப் பதவி தேடிடும் பண்பின்ர் கூடினர்- இங்கு இனத்தின் இழிவுதுடைக்க எத்தகைய கஷ்டநஷ்டமும் ஏற்கத் தயார் என்று உறுதிகூறிய வீரர் கூடினர். அங்கு, வெள்ளை ஆடை அணிந்தவரின் விழா- இங்குத் துயர்கொண்ட திருஇடத்தின் இழிவைக்குறிக்க இனிக்கருப்பு உடைதரித்து, விடுதலைப்போர் துவக்குவோம் என்று சூள் உரைத்த வாலிபர்களின் அணிவகுப்பு. அங்கு அறுவடை- இங்கு உழவு! அங்குப் பேரம்- இங்கு வீரம்! அங்குக் காங்கிரசு- இங்குத் திராவிடர்கழகம்! செல்வம் கொழிக்கும் பம்பாய் நகரிலே, தாஜ் ஹோட்டல் என்ன! ராயல் ரெஸ்டாரண்ட் என்ன! ரம்மியமான பல விடுதிகள் என்ன! இவ்வளவு வசதிகள்! செல்வவான்களுக்கு்த் தேவையான சுவைகள்!- இங்கோ வெட்ட வெளியிலே, ஒரு கொட்டகை! கொட்டகைக்கும் நகருக்கும் இடையே இரண்டுமைல் தொலைவு! மாநாட்டார், சாப்பாடு போட இல்லை! தங்கப்போதுமான விடுதிகள் இல்லை! மழைத்தொல்லையோ தொலையவில்லை! இடியும் மின்னலும், அதிகாரவர்க்கத்தின் அமுலும் அமோகம்! மாநாட்டுக்கு மகா-