பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 ★ இல்லம்தோறும் இதயங்கள்


எண்ணங்கள் இதயத்தைப் பாம்புகள் போல் கெளவின. எண்ணப் பாம்புவாய்ப் பட்ட இதயத் தவளை படபடக்க, கால்கள் பூமியில் படாமலே பட, கைகள் சுவரைப் பிடிக்காமலே பிடிக்க, அவள் நடக்காமலே நடந்து, அறைக்குள்ளே தன்னையறியாமலே தாவி கட்டிலில் விழுந்தாள். அதை பாடையாக நினைத்துக்கொண்டு பிணம்போல் விழுந்தாள்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அந்தப் பிணம் எழுந்தது.

வெளியே கதவைத் தட்டுஞ் சத்தங் கேட்டு வந்தாள். மணி நின்றுகொண்டிருந்தான். “இந்தாங்க மாத்திரை. மொத்தம் முப்பது இருக்கு, ஒங்கள அனாதை மாதிரி விட்டுட்டுப் போறதை நினைத்தால்...”

மணிமேகலை அவனை நிமிர்ந்து பார்த்தாள். என்னதான் என்றாலும், அவன் அன்னியன். விட்டுக் கொடுத் தால் அப்புறம் விடுபட முடியாது. காலையில் இவனிடம் கணவரிடம் சொல்லும்படிச் சொல்லியிருக்கக் கூடாது.

அவள் பிராயச்சித்தம் செய்தாள். “குடும்பமுன்னா ஆயிரம் இருக்கும். புத்தர், சாவாத வீட்ல கடுகு வாங்கிட்டு வாங்கன்னு சொன்ன கதைதான். வீட்டுக்கு வீடு வாசல்படி, அதோட செக்கப் பண்ணிக் கொள்றதுல தப்பில்ல. அவங்க மேல தப்பில்ல...”

“தப்பில்லதான். அதுக்காக இப்படியா ஆர்ப்பாட்டம் செய்யுறது ?”

“போகட்டும். திருவள்ளுர் டாக்டர் மாதவனா. ஆமாம். மாதவன்தான் அவரப்பற்றி அப்போ ஏதோ சொன்னிங்க போலுக்கு ?”

“ஆமா. அவன் சுத்த அம்போக்கு, டாக்டர் குலத்துக்கே அவன் ஒரு விதிவிலக்கு முன்னால கள்ளப்பபிள்ளியளை...