பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154 ★ இல்லம்தோறும் இதயங்கள்


ஜாதி ஏழைப்பெண் காத்தாயியும், ஹரிஜனப் பெண் ராமக்காவும் இன்னும் இவர்களைப் போன்ற இரண்டொரு விவசாயக் கூலிப் பெண்களும், இவளைச் சூழ்ந்து கொண்டார்கள். ராமக்கா மூச்சைப் பிடித்து வெளியே நிறுத்துபவள் போல் பேசினாள்.

"எம்மா.. எம்மா. எப்படிச் சொல்லுறதுன்னே தெரிய மாட்டக்கு. சொல்லாமலும் இருக்க முடியல. இங்க நாயும் பேயும் நாலு விதமாப் பேசுது. வேற யாருமில்ல, ஒங்க ஜாதில ஒசந்து நிக்கிற ஆளுங்கதான். நீங்க வாழா வெட்டியா வந்துட்டியளாம். புருஷங்கிட்ட ஒத்து போவத் தெரியாதவியளாம். இன்னும் ஒரு வருஷத்துல கையி காலுல விரல் இருக்காதாம். ஒங்க நாத்தனார்காரியும் 'பீட போவமாட்டக்குன்னு' எல்லாருகிட்டயும் சொல்லுதாவ. உங்கள வாய் நிறைய வரணுமுன்னு சொன்ன இந்த வாயாலயே இப்போ சொல்லுதேன், பேசாம புருஷன் வீட்டுக்குப் போயிடுங்கம்மா! நல்லதோ கெட்டதோ அங்கயே பழிகிடங்கம்மா. இன்னொண்ணயும் சொல்ல நினைக்கேன். வரமாட்டக்கே...”

"சும்மா சொல்லு! நான் இப்போ எல்லாத்தையும் தாங்கிக்குவேன்.”

"ஓங்களபோயி-இங்க ராசாத்திய போயி-கூத்துப் போடுற கோவிந்தனை வச்சிக்கிட்டு இருக்கதா, ஒங்க நாத்துனாரே சொல்லியிருக்காம்மா. என் ராசாத்தி ! மவராசி! பேசாம போயிடும்மா! வந்துடும்மான்னு சொல்ல முடியாமப் போன என் வாயில கரையான் அரிக்க-கட்டெறும்பு திங்க-பேசாம போயிடும்மா ! போயிடு என் மவராசி!"

எல்லாப் பெண்களும், ராமக்கா சொல்வது உண்மை என்று ஒப்புக்கொண்டவர்கள் போல் 'பரக்கப்பரக்க' விழித்தார்கள். மணிமேகலை அந்த அன்புப் பெட்டகங்களை