பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ♦ 165


எப்படி வந்தான்? இந்த பஸ்ல வரலியே. அந்த இருவரின் திகைப்பையும் ரசித்துவிட்டு கோவிந்தன் ‘லாரில வந்தேன்’ என்றான்.

ரயில் புறப்பட இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. இப்போதுதான் மணிமேகலைக்கு டிக்கெட் ஞாபகம் வந்தது. கையில் இருபது ரூபாய்தான் இருக்கு. டிக்கெட் முப்பது ரூபாய். அங்கிருந்து அரக்கோணம் போயாக வேண்டும். அவள் கையை நெரித்தாள். அப்போது கையில் போட்டிருந்த ஒரே ஒரு தங்க வளையலைப் பார்த்தாள். ஒரு பவுன் தேறும்.

‘கூத்து’ கோவிந்தனைக் காணவில்லை. ரத்தினம் எதையோ யோசித்துக்கொண்டு நின்றான்.

“அண்ணே ! அண்ணாச்சி!”

“என்னம்மா? சொல்லும்மா!”

“டிக்கெட்டுக்குப் பணம். பணம் போதல.. இந்தக் காப்ப.”

ரத்தினம் அவளையே பார்த்தான். அவள் தயங்கிப் பேசிவிட்டு தயங்காமல் கொடுத்த தங்க வளையலை, தயங்கியபடியே வாங்கிக்கொண்டான். மணிமேகலைக்கா இந்த கதி?

“என்னண்ணே யோசிக்கிற? என் தங்க வளையலைப் பார்த்ததும், கண்ணாடி வளையல் கூட இல்லாத பெண்களோட நெனப்பு வருதா? ” மணிமேகலை சிரித்தாள். அந்தச் சிரிப்பால், இதுவரை எல்லோரையும் ‘அழவைத்து’ப் பார்க்கும் அந்தக் கம்பீரக்காரன், இப்போது வேறு பக்கமாகத் திரும்பி தன் கண்களைத் துடைத்துக்கொண்டான். பாவாடை கட்டிக் கொண்டு தன் வீட்டில் சுட்ட வடைகளைக் கொண்டு வந்து கொடுக்கும் அந்த பத்து வயதுச் சிறுமி. அவள்