பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162 ♦ இல்லம்தோறும் இதயங்கள்


நடந்தாள். மணியால் அவளுடன் இணையாக நடக்க முடியவில்லை. ஒடிப் பார்த்தான். மூச்சு இளைத்தது. பிறகு பின்தங்கி நடந்தான்.

நல்ல வேளையோ, கெட்ட வேளையோ எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி நின்றது. இருவரும் ஏறிக் கொண்டார்கள். எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்து கொண்டார்கள்.

சென்னைக்கு வந்தபோது மணி மாலை நாலாகி விட்டது. இருவரும் பாரிமுனை வந்து அங்கிருந்து பஸ் ஏறி அண்ணா சதுக்கம் வந்தார்கள். அங்கே கூட்டம் அதிக மாய் இருந்த இடத்தில் அவள் அமர்ந்தாள். சிறிதுநேரம் நின்றுகொண்டிருந்த மணி அவளருகே உட்கார்ந்தான். மணிமேகலை ரசாயன ரீதியில் அவனிடம் கேட்டாள்:

“விடுதி எங்க இருக்கு ?”

“அடையாறுல”.

“போவோமா ?”

“நீங்க இங்கயே இருங்க. நான் போய் விசாரிச்சிட்டு வாரேன்.”

“இதுல விசாரிக்க என்ன இருக்கு? எப்படியாவது சேர்ந்திடணும்."

“அவசரப்படாதிங்க. நான் போய் பக்குவமாய் பேசிட்டு வாரேன்.”

‘கம்பவுண்டர்’ மணி போய்விட்டான். மணிமேகலை வருவோர் போவோரைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். ஜோடிகள் பக்கமாகப் போய் அவர்களின் நெருக்கத்துக்கு குறுக்கே நின்று ‘மிளகு வட ஸார். வேர்க்கடல ஸார்’ என்று தகர டின்னை வைத்துக்கொண்டு தகாது நடந்து கொள்ளும் வியாபாரச் சிறுவர்கள். சாப்பாடு சரியாகக்