பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184 ♦ இல்லம்தோறும் இதயங்கள்


இல்லங்கள் யாவிலும்
உள்ளங்கள் உண்டல்லோ
உள்ளங்கள் உண்டல்லோ...
காடு மலைகளிலும்-பல
வீடுகள் சிதறி உண்டே
தோட்டத்தில் உண்டு, தீவினில் உண்டு.
செல்வதுதான் யாரோ
சொல்வதுதான் யாரோ -(இல்லங்கள்)


பிள்ளையைக் கொடுப்பாயா-இல்லை
உன்னையே தருவாயா
உன்னையே தருவாயா...
உன் ஜெபம் தாங்குமோ... உன் பொருள் வருமோ
உன்னதர் கேட்கிறாரே. உன்னிடம்
உன்னதர் கேட்கிறாரே (இல்லங்கள்)

மணிமேகலை விம்மினாள். இல்லம் தோறும் இதயங்கள் உண்டல்லவா ! இது ஏன் மனிதர்களுக்குத் தெரிய வில்லை? இது ஏன் உறவைச் சுமப்பவர்களுக்குப் புரிய வில்லை? இது ஏன் மிஸ்டர் ஜெயராஜுக்கு தெரியவில்லை?

உள்ளங்கள் உண்டல்லோ
உள்ளங்கள் உண்டல்லோ...
உன்னையே தருவாயா...
உன்னையே தருவாயா...
உன்னதர் கேட்கிறார்

பாடல் முடிந்ததும், மற்றவர்களைப் போல் அவளும் முழங்காலிட்டாள். என்னையே தருகிறேன் என்பவள் போல் அந்த உன்னதனை முருகனாகவும், இயேசுவாகவும் எண்ணி, எல்லாம் கடந்தும், எல்லாவற்றிலும் ஊடுருவியும் நீக்கமற நிற்கும் ஞானப்பெருவெளிக்குள், அவள் பறவை போல் பறந்தாள். ரத்தினத்தின் பேச்சுக்கு இணையாக,