பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196 ★ இல்லம்தோறும் இதயங்கள்


"கட்டுன பெண்டாட்டி செத்துப் போயிட்டாள்னு நினைத்தியாடி? என் இடத்த அபகரிக்கலாமுன்னு நினைக்கியாடி? அந்த மூளகெட்ட முண்டத்தோடு, கை மேல கைபோட்டு நடக்கலாமுன்னு நினைக்கியாடி ? கொலை பண்ணிடுவேன்! அவன் கையைத் தொடுற அளவுக்கு, நீ ஏண்டி டம்ளரை பிடித்தே? வேலைக்காரியா வந்து வீட்டுக்காரியா மாறி இந்த வீட்டுக்காரியை வேலைக் காரியாய் மாற்றப் பார்க்குறியோ? நடக்காது.டி. ஓங்க ரெண்டு பேரையும் கொலை பண்ணிட்டு போலீஸ்ல சரணாயிடுவேன். ஒங்கள கொஞ்சுறதுக்கு விடமாட் டேண்டி, கொஞ்ச விடமாட்டேண்டி மணியாம் மணி. பேரைச் சுருக்குற அளவுக்கு வந்துட்டிங்களோ? அவனும், வெறுந்தண்ணி டம்ளர விஸ்கிப் பாட்டலை வாங்கிறது மாதிரி எப்படி மயங்கி வாங்குறான்! என்னமா ஏங்கி வாங்குறான்! அந்த சீமப்பண்ணி வரட்டும். ஒங்க ரெண்டு பேரையும் கோர்ட்ல ஏத்துறனா இல்லையான்னு பாரு. ஒஹோ.”

இது அதிகப்பட்சம். இனிமேல் இருப்பது, அவள் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துவது மாதிரி. கோவிந்தன் வருவது வரைக்கும் காத்திருக்கலாம் என்று நினைத்தது தப்பு. பழையபடியும் தெருவுல நடக்கலாம். யாராவது நல்லவங்க கண்ணுல விழுவாங்க.

சிந்தனைச் சிரமங்களுக்குப் பிறகு மணிமேகலை புறப்பட்டாள். காமாட்சியின் பதினைந்து வயது 'பாப்பாவும்' எட்டு வயது 'அரசுவும்' அவள் கையில் இருந்த சூட்கேஸைப் பார்த்ததும் புரிந்துகொண்டார்கள். 'பாப்பா' மணிமேகலையை வாசல்படியோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டாள். "போகாத அக்கா போகாத அக்கா! மதர் ஒரு மண்ணாங்கட்டி.." என்று அவள் புலம்பியபோது அரசு உள்ளே போய் அம்மாவைக் கூட்டிக்கொண்டு