பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ♦ 197


வந்தான். காமாட்சி, நாலடியை ஒரடியாய்த் தாண்டி, நடைவாசலுக்கு வந்து, திடீரென்று குனிந்து, மணிமேகலையின் காலைத் தூக்கி தன் இடுப்புப் பக்கமாக வைத்துக் கொண்டு “என்னடி நினைச்சே” என்று பயங்கரமாகச் சொன்னபோது பிள்ளைகள் "வேண்டாம்மா. வேண்டாம் மம்மி" என்று அழுதன. காமாட்சி தன்னிடம் பிடிபட்ட மணிமேகலையின் காலில் போட்டிருந்த ரப்பர் செருப்பைக் கழட்டி மணிமேகலையை விட்டாள். அவள் ஒரு கால் செருப்போடு ஒன்றும் புரியாமல் தவித்தபோது காமாட்சி தன் கைச் செருப்பை அவளின் கைக்குள் திணித்துக்கொண்டே "இந்தாடி என்னை இந்தச் செருப்பால அடிடி! நான் ஒன்னைச் சொன்னது தப்புத் தாண்டி! நல்லா அடிடி! ஒன்னைச் சொல்லிட்டு நான் உயிரோட இருக்கதே தப்புடி நீ அடிக்க மாட்டியாடி? செருப்பை வைத்து அடிக்கமாட்டியாடி? நான் சொல்றத செய்யத்தானடி வேலைக்காரியாய் வந்தே. என்னை அடிக்க மாட்டியாடி? அவ்வளவு திமிறாடி! சரி, நானே என்னை அடிச்சிக்குறேன்...” என்று அழுதுகொண்டே மணிமேகலையிடம் திணிக்கப்பட்ட செருப்பை எடுத்து, தன் தலையிலேயே அடித்துக்கொண்டாள் பல தடவை. "மம்மிக்கு இப்படியாவது புத்தி வரட்டும்’ என்று நினைத்ததுபோல் பிள்ளைகள் பேசாமல் இருந்தபோது மணிமேகலை அந்தக் குழந்தையிலும் படுகுழந்தையான காமாட்சியை கட்டியணைத்து வீட்டுக்குள் கொண்டு போனாள்.

இரவில் வெளியே நட்சத்திர வீட்டு போர்டிகோவில், வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த கணவனுக்கு காமாட்சி சவாலிடுவது மணிமேகலைக்கு நன்றாகக் கேட்டது. “யோவ் சீமப்பண்ணி! ஒரு வேலைக்காரியை யாவது உருப்படியா விட்டியாய்யா! ஏய்யா ஒனக்கு இந்தப் புத்தி? பொம்புள பொறுக்கி! ஆனால் ஒண்ணு. இந்த