பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



30 + இல்லம்தோறும் இதயங்கள்



கொடுத்தான். அவள் அதை வாங்காமலே "அரிவாள வச்சி சீவுனால் என்ன? எதுக்காக வாயில கடிக்கணும்?" என்று சொன்னதும் 'ஐ அம் ஸாரி' என்று சொல்லிக்கொண்டே அருகே கிடந்த அரிவாளை எடுத்தபோது, அவள் "பரவாயில்ல! கரும்ப வேஸ்டாக்கக் கூடாது” என்று சொல்லிக்கொண்டே உரித்த கரும்பை வாங்கிக் கொண்டாள்.

    சந்திரனுக்கு, தைரியம் வந்தது. 'நீங்க' 'நீ'யாகும் அளவிற்குத் தைரியம் வந்தது.
    "ஆமா... என்னை ஸ்டேஷன்ல பார்த்ததுமே அடையாளம் கண்டுட்டியே... ஒன்னால எப்படி முடிஞ்சுது?"
    "எல்லாம் காமன் சென்ஸ்தான்."
    "காமன்னால் மன்மதன்னு ஒரு அர்த்தம் உண்டு.” 
    பாமா, அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.

அவனோ "அட! சும்மா சொல்லுங்க... சும்மா சொல்லு!” என்று கெஞ்சினான்.

"அண்ணி என் தம்பி, எஞ்ஜின் மாதிரி நிறம். அதாவது டிஸல் எஞ்சின் நிறம். ஒரு பல்லு தெத்துப் பல்லு. ஆனால் அதுவே அழகா இருக்கும். எப்போ பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டு இருப்பான். சிந்தனையே இல்ல என்கிற அளவுக்கு சிரிச்சிட்டு இருப்பான். கூடவே ஒரு கெட்ட பழக்கமும் உண்டு. எப்போ பார்த்தாலும் சட்டைக் காலரைப் பிடிச்சி தேய்த்துக்கிட்டே இருப்பான்னு சொல்லியிருக்காங்க. ஈலியா கண்டுபிடிச்சிட்டேன்."

     சட்டைக் காலரைப் பிடித்துக் கழுத்தில் தேய்த்துக் கொண்டிருந்த அவன், திடுக்கிட்டு கையை எடுத்து சட்டைப் பித்தானில் பிடித்துக்கொண்டே, அவளைப் பார்த்தான். உற்றுப் பார்த்தான்.