பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ♦ 33

வச்சிருக்கிறவங்களைப் பார்த்து சிரிக்கிற அளவுக்கு முன்னேறியிருக்கு. இருந்தாலும் நீ இப்படி கையை நீட்டியிருக்கக் கூடாது.”

“அவருதான் இந்த மோதிரத்தைப் பார்க்கலானார்.”

“டேய் சந்திரா... ஹரிச்சந்திரா... நீ இந்த வங்கி மோதிரத்தைப் பார்த்ததே இல்லியா? எனக்குப் போன வருஷம் இதேமாதிரி வாங்கித் தாரேன்னு சொன்னே. நான் வேண்டாமுன்னு சொன்னேன்... ஞாபகம் இல்லியாடா?”

இருவரும் ஞாபகப்பிரக்ஞை இல்லாதவர்கள்போல் தங்கள் தலைகளை, தங்கள் கைகளாலேயே உருட்டியபோது, மணிமேகலை பல் தெரியச் சிரித்து, பாநயம் போல் பேசினாள்.

“கவலப்படாதிங்க என் பிரச்னையும் முடிஞ்சிட்டதுல எனக்கு சந்தோஷம். என் பையனோட ஜாதகத்தைப் பார்த்த ஜோஸ்யர், என் மவன் ஒண்ணு தாய்மாமா மகளைக் கட்டுவான். இல்லன்னால் அத்தை மகளைக் கட்டுவான்னு சொன்னாரு. கடைசி காலத்துல நானும் அவரும் ‘அத்த பொண்ணா, மாமா பொண்ணா’ன்னு சண்டை போட வேண்டியதிருக்குமோன்னு பயந்தேன். இப்போ பிரச்னை தீர்ந்துட்டு.”

சந்திரனும், பாமாவும் நாணத்துடன் அவளைப் பார்த்தார்கள். மணிமேகலை, தாயின் கருணையுடன் அவர்களைப் பார்த்துக்கொண்டே பேசினாள்.

“நான் ஒங்க இரண்டு பேரையும் இணைத்து வைக்கறதுக்கு பெரியவங்ககிட்ட சொல்லப் போறேன். சம்மதந்தானே ? வாயைத் திறந்து சொன்னால்தான் ஏற்பாடு பண்ணுவேன்.”