பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78 ★ இல்லம்தோறும் இதயங்கள்


தித்த சூரியனும், வானமும், பூமியும், விஞ்ஞான ரீதியில் தங்களுக்குள்ளே மாற்றங்களுக்கு உட்பட்டாலும், மனிதனைப் பொறுத்த அளவில், அப்படியேதான் இருக் கின்றன. இளமையையும், வாலிபத்தையும், முதுமையையும் ஒரு சேர அனுபவித்துக்கொண்டே காலம் நிற்கிறது. ஒடவில்லை. முதுமை மறுபடி வாலிபமாக, வாலிபம் மறுபடி பால்யமாக, பால்யம் மறுபடி வாலிபமாகி, முதுமையாக காலம் மாறாமல் நிற்கிறது. மாறவில்லை. ஆனால் சூழலுக்கு ஏற்றபடி மாறும் மனிதன்-பிறரை மாற்றியும் பிறரால் மாற்றப்பட்டும் பிறறோடு மாறியும் வரும் மனிதன் பழியை செளகரியமாக, காலத்தின்மீது போட்டுவிடுகிறான்.

அப்படித்தான் மணிமேகலையும் மனிதர்களின் செயலை காலச் செயலாகக் கணக்கிட்டு, காலத்தை நொந்தாள். கண் முன்னாலேயே பிறக்கும் குழதை, அதே கண் முன்னாலேயே- அதே சமயம் அந்த கண்ணுக்குத் தெரியாமலேயே அணு அணுவாய் வளர்ந்து, தானே ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதுபோல, அந்த வீட்டு மனிதர்களும் அவள் உணராமலே- அதாவது படிப்படியாக உணர்ந்தாலும் மொத்தமாக உணராமலே மாறிக் கொண்டிருந்தார்கள். மாறாமல் இருக்க நினைத்த மணிமேகலையையும், அந்த மாற்றம் இட்டும், தொட்டும் இடையூறு செய்தும் மாற்றிக்கொண்டிருந்தது. ராமபத்திரன் மாறியிருந்தால் அவர்கள் மாறியிருக்காமல் இருந்திருக்கலாம். அவர் மாறவில்லை. அவர் புத்தி அப்படியேதான் இருந்தது.

ஒருநாள், செவ்வாய்க்கிழமை என்று ஞாபகம்.

எல்லோரும் மத்தியானச் சாப்பாட்டு மயக்கத்தில் லேசாகத் தூங்கிக்கொண்டிருந்தபோது மணிமேகலை ஏதேதோ நினைவுகளுடன் வெளியேயுள்ள மாமரத்து