பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 89


வீட்டுக்குப் பின்னால் வந்து, அவள் முருங்கை மரத்தை வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தபோது, தன் தோளில் யார் கையோ படுவது கண்டு அவள் திரும்பி னாள். கடைக்குட்டி மைத்துனியான இந்திரா—இன்னும் பதின்மூன்று வயதுகூட முடியாத அந்தச் சிறுமி, அண்ணியின் மனவுளச்சலைப் புரிந்துகொள்ளும் பக்குவம் செல் லாத அவள், அண்ணி ஏதோ கஷ்டப்படுவதால், தானும் கஷ்டப்படுவது போல் மணிமேகலையின் முன்னால் வந்து அவள் மாராப்புச் சேலையை இழுத்து மூடி, காதுப் பக்கம் தொங்கிய முடியை ஒதுக்கி, கை வளையல்களை உருட்டினாள். எல்லாவற்றிற்கும் மேலாக அந்தக் கண்கள் அன்பைச் சொட்டின.

மணிமேகலையால் தாள முடியவில்லை. மைத்துணிை யின் கைகளைப் பற்றிக்கொண்டே “நீ நல்லா இருப்பம்மா. நல்லா இருப்பே...” என்று சொல்லி விம்மினாள்.

“எதுக்கு அண்ணி அழுவுறிங்க? நோய்தான் சுகமாயிட்டே!”

“ஒண்ணுமில்லம்மா. எதையோ நினைச்சால் என்னமோ வருது. நான் அழுததை யாருகிட்டயும் சொல்ல மாட்டியே?”

“சரி அண்ணி. பிள்ளியக் குடுங்க, ஒங்களுக்கு கை வலிக்கும்.”

எந்தச் சமயத்தில் ராமபத்திரன் வரப்போகிறாரோ என்று, அவள் முருங்கை மரத்தை சுற்றிச் சுற்றியே வந்தபோது, பூமியும் தன்னைச் சுற்றியதில் இரவு வந்தது.

லட்சுமி வந்தாள். வசந்தியை துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாள். இந்திரா மூலம் விசாரித்ததில், மணிமேகலைக்கு இரண்டு இனிப்புச் செய்திகள் கிடைத்தன. ராமபத்திரன் தூத்துக்குடிப் பக்கம் போயிருக்காராம்.