பக்கம்:இல்லற நெறி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இல்லற நெறி


இடங்கள் காலியாகவும் அவற்றின் சுவர்கள் ஒட்டிய நிலையி லும் இருக்கும்போது ஆண்குறி விரைகளின் முற்புறத்தில் தொங்கிய நிலையில்கT-துரங்கிய நிலையில்-இருக்கும். இப் பொழுது அந்த இடங்களில் சிறிய அளவில்தான் குருதி இருக் கும். எனினும், ஆண் குறியில் புணர்ச்சித் துடிப்பு ஏற்படுங் கால் இந்த இடங்களில் குருதி விரைவாகப் பாய்ந்து நன்ருக நிரம்புகின்றது. ஆண்குறியிலுள்ள குருதிக் குழல்கள்பாய்குழல்களும் வடி குழல்களும்-ஒரே சமயத்தில் உட்புற மாகவும், வெளிப்புறமாகவும் குருதியை விடுவதற்கேற்ற வாறு அமைந்துள்ளன. இஃதுடன் குறியில் ஏராளமான நீளுந்தன்மையுள்ள இழையம் இருப்பதால், அஃது ஆண் குறியின் அளவுகளில் மாற்றம் அடைவதற்குத் துணையாக உள்ளது; ஆண் குறியெங்கும் பரவி நிற்கும் நரம்புப் பொறிநுட்பத்தினால் இச்செயல்கள் நடைபெறுகின்றன; இவ்வாறு ஆண் குறி புணர்ச்சித் துடிப்புடன் இருக்கும் பொழுது அது பருமனிலும் திசையிலும் மாற்றம் அடைகின் றது; அது விறைத்து, உறுதியாகவும், பருத்தும், எழுந்த நிலையிலும் இருக்கின்றது. புணர்ச்சித் துடிப்புக் காலம் முடி யும்வரை இந்நிலையிலேயே இருக்கும். இப்பொழுது குறியின் முகட்டிலுள்ள முன்தோல் பின்னுேக்கி நகர்ந்து மணியின் முழுப் பகுதியையோ அல்லது ஒரு பகுதியையோ வெளிக் காட்டுகின்றது. துடிப்பு அடங்கியதும் அது பழைய தொங் கிய நிலையை அடைந்து விடுகின்றது.

சாதாரணமாகத் துரங்கிய நிலையில் ஆண் குறி சுமார் 3; அங்குல நீளமும் அதன் நடுப்பகுதி சுமார் 34 அங்குல சுற்றளவும் இருக்கும். அது விறைத்த நிலையில் சுமார் 6 அங்குல நீளமும், !! அங்குல சுற்றளவும் இருக்கும். இந்த அளவுகள் மனிதருக்கு மனிதர் மாறுபடும். ஒரு மனிதரு டைய உடலமைப்பிற்கும். ஆண் குறியின் அளவுகட்கும் யாதொரு தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவ

51. Ggf1äistu st850–Flaccid. 53. gopulà-Tissue,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/100&oldid=1285125" இலிருந்து மீள்விக்கப்பட்டது