பக்கம்:இல்லற நெறி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியடிைப்படையில் திருமணம் 93

சுன்னத்துச் சடங்கினால் நாளடைவில் தம் நுட்பமான உணர் வினை இழக்கின்றன. இதல்ை முகட்டில் துடிப்பு உண்டாதல் சற்றுச் சிரமமாகின்றது. இதன் காரணமாகவே சுன்னத்து செய்யப்பெற்ற மனிதன் அதிக நேரம் கலவி புரிகின்ருன்; அவனுக்கு உச்சநிலை உணர்ச்சி' ஏற்படுவதற்குக் கால தாமதம் உண்டாகின்றது! ஆண் குறியிலுள்ள நுனித்தோல் மிகவும் நீளமாக இருந்தாலும், அல்லது முகட்டை நெகிழ விடாமல் இறுக்கமாக இருந்தாலும் சுன்னத்து செய்து கொள்வது நல்லது. சாதாரணமாக எல்லோருக்குமே இது வேண்டுவதில்லை என்பதே என் கருத்தாகும்.

ஆண்குறியின் வளையாத விறைத்த தன்மை புணர்ச் சிக்கு மிகவும் இன்றியமையாதது. அந்நிலையில்தான் இனப் பெருக்கத்திற்குச் சாதகமான நிலையை உண்டாக்குகின்றது. எவ்வளவுக்கெவ்வளவு யோனிக் குழலினுள் 48 விந்து ஆழமா கப் பாய்ச்சப்பெறுகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு விந்த ணுக்கள் கருப்பையினுள் நுழைவதற்குச் சாதகமான வாய்ப்புகள் ஏற்படுகின்றன. தவிரவும், ஆண்குறி விறைத்த நிலையில் யோனிக் குழலிலும் யோனி லிங்கத்திலும் உராய் வதால் பெண் பிறப்புறுப்புகளில் துடிப்பினை எழுப்புகின் றது. பெண் குறியிலும் யோனிக் குழலிலும், கருப்பையி லும் எழும் தாள இயக்கம்போன்ற அசைவுகள் விந்து கருப் பையினுள் உட்புகும் வழியைச் சாதகமாக்குகின்றன.

விறைத்தல்: ஆண் குறி விறைக்கும் நிலையை அடைவ தற்கு அதன் அமைப்பே சாதகமாகவுள்ளது, ஆண் குறி கடற் பஞ்சுபோன்று மெத்தென இருப்பதை யாவரும் உணர்வர். ஆண்குறியின் எல்லாப் பகுதிகளிலும் எண்ணற்ற சிறிய குகை போன்ற இடைவெளிகள் உள்ளன. இந்த

47. உச்சநிலை உணர்ச்சி-Orgasm: 48. யோனிக் குழல்-Vagina. 49. யோனிலிங்கம்-(.litoris, 50. Qusiv G súl-Vulva.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/99&oldid=598952" இலிருந்து மீள்விக்கப்பட்டது