பக்கம்:இல்லற நெறி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இல்லற நெறி


உள்ளன. நுனிப்பகுதி உறுதியான முகட்டைக் கொண்டுள் ளது. அது லிங்கம் அல்லது மணிக்8 என வழங்கப்பெறும்: அதன் நுனியில்தான் சிறுநீர்ப் புறவழியின் திறப்பு உள்ளது. இந்த ஆண் குறி முழுவதும் மிகவும்.நெகிழ்வான, மெல்லிய, நீளுந்தன்மையுள்ள தோலினல் போர்த்தப்பெற்றுள்ளது. இத்தோல் ஆண்குறியின் முகட்டை இரட்டைமடிப்பாக மூடிக்கொண்டுள்ளது. அதற்குமேலும் நீட்டிக்கொண்டுள்ள தோல் நுனித்தோல்க்க அல்லது முன்தோல்45 என்றுவழங்கப் பெறும். இதன் அளவு மனிதருக்கு மனிதர் வேறுபடும். சிலரிடம் இது மணியை முழுவதும் மூடிக் கொண்டிருக்கும்; சிலரிடம் இது முழுவதும் மூடிக் கொண்டிருப்பதில்லை; சில ரிடம் சிறிதும் மூடாமலும் இருக்கும். இதன் துணியில் ஏராளமான நரம்பு முடிவுகள் உள்ளன. ஆகவே, இப்பகுதி மிகவும் உணர்வுடையது. எனினும், இதனையும் ஆண்குறி யின் முகட்டையும் இணைக்கும் மடிப்புத் தோல் இன்னும் அதிகமான தொடு உணர்ச்சியைக் கொண்டது. அதிகமாக நீட்டிக் கொண்டிருக்கும் முன்தோலின் ஒரு பகுதியை அறுத்து நீக்குவதே 'சுன்னத்து' என்று வழங்கப்பெறு கின்றது. யூதர்களிடமும்இஸ்லாமியர்களிடமும் இப்பழக்கம் இன்றும் இருந்து வருகின்றது. முன் தோலுக்கும் மணிக்கும் இடையிலுள்ள இடத்தில் துர்நாற்றமுள்ள அழுக்கும் சுரப்பு நீர்களும் தங்காதிருப்பதற்கும் ஆண்குறி விறைத்த நிலையில் மணியை எளிதாகக் கீழே தள்ளுவதற்குமே இச் சடங்கு செய்யப்பெறுகின்றது. ஆண்குறி முழுவதிலும், குறிப்பாக அதன் முகட்டில், எண்ணற்ற நரம்பு முடிவுகள் உள்ளன. ஆகவே, ஆண்குறி முழுவதும் நுட்பமான தொடு புலனைக் கொண்டுள்ளது. மிக நுட்பமான தொடு புலன் உணர்வினைக் கொண்ட ஆண் குறியின் முகட்டிலுள்ள நரம்பு முடிவுகள்

48. லிங்கம் அல்லது மணி-Glas. 44. துணித்தோல்-Prepuce. 452 up6řG Gráb–Foreskin: 46. **śraráž! --Circumcision.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/98&oldid=1285124" இலிருந்து மீள்விக்கப்பட்டது