பக்கம்:இல்லற நெறி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்ப ைஉயில் திருமணம் 11 ?

கின்றது; காமச்சுரப்பு நீர் உள் இன்மையால்தான் ஒருவர் கிழவராகின்ருர் என்று ஒருகாலத்தில் கருதப் பெற்றது: பிரெளன் செக்கு வாாட்' என்னும் ஃபிெெரஞ்சு மருத்துவர் 1889-இல் தம்முடைய எழுபத்தொன்ருவது வயதில் நாயின் விரைகளினின்றும் எடுக்கப்பெற்ற சாரத்தைத் தன் உடலில் குத்திப் புகுத்திக்கொண்டு அதன் விளைவுகளைக் கவனித்துத் தன்னுடைய, பொது உடல்நலம், தசையாற்றல், மனச் செயல்கள் ஆகியவற்றில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டன என்று கூறியுள்ளார். பேராசிரியர் ஸ்டீனக் என்பார் விந்து செல்லும் துாம்பினைக் கட்டி விந்தனுக்களை உற்பத்தி செய்யும் விரைப் பகுதிகளைச் சுருங்கி மறையக்கூடுமாறும், ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் பகுதிகளை மாற்றும் தன்முறையில் இயங்குமாறும் செய்தார். இவரும் வொரளுஃப் என்பாரும் மானிடக் குரங்கின் சுரப்பிகளை மனித னிடம் நட்டுச் சோதனைகள் செய்தனர். ஆனல், முன்னர்த் தயாரிக்கப்பெற்ற விரைச்சாரங்களால் நல்விளைவுகள் ஏற்பட்டன என்பதற்குக் கிடைத்துள்ள சான்றுகள் போதா.

அண்மைக் காலத்தில் மிகத் துய்மையானதும் மிக அடர்வுள்ளதுமான ஆண் ஹார்மோன் உண்டாக்கப் பெற்றுள்ளது. இது விரைகள், ஆணின் சிறுநீர், வேறு மூலங்கள் மூலம் எடுக்கப்பெற்றது. இன்னும் அண்மைக் காலத்தில் செயற்கை முறையில வேதியியற் பொருள்களி லிருந்து ஆண் ஹார்மோன் பிரித்தெடுக்கப்பெற்றுள்ளது; டெஸ்டாஸ்டெரோன்' எனப்படும் இந்த ஹார்மோன் உடலினுள் வாயின் மூலமும் குத்திப்புகுத்தல் மூலமும் செலுத்தப் பெறுகின்றது. விரைகள் நீக்கப்பெற்ற ஆண் பிராணிகளிடம் உடன்நிலைப் பாலறி குறிகளை உண்டாக்கு கின்றது. பெண் பிராணிகளிடம் ஆணிடம் உள்ளவை

ss. 321st&-Gaieairfe-Brown sequard. 86. 3ju —fi Gy6ir 3T—ConCentrate. 87; so-op.m. oGL-såstro-Testosterone.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/117&oldid=597846" இலிருந்து மீள்விக்கப்பட்டது