பக்கம்:இல்லற நெறி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

இல்லற நெறி


போன்ற மாறுபாடுகளை விளைவிக்கின்றது. எடுத்துக் காட்டாக, இஃது ஒரு பெட்டைக் கோழியிடம் புகுத்தப் பெற்ருல். அதற்குக் கொண்டை வளர்கின்றது; அது சேவலைப் போல் கூவவும் செய்கின்றது. எனவே, இதற்கு ஆளுக்கும் தன்மை உண்டு என்று தெரிகின்றது.

புணர்ச்சிக் குறைபாடுகள் உள்ளவர்களிடம் இதனைச் செலுத்தி நல்ல விளைவுகளைக் கண்டிருக்கின்றனர். இது கிழவர்கட்கு ஒரு நல்ல பொதுத் துண்டுகோலாக இருக்க வும், குறைந்து போகும் புணர்ச்சித் திறனைத் திரும்பப் பெறு வதற்கும் இதனைப் பரிந்துரை செய்கின்றனர். எனினும், கிழவகுைம் தன்மை பிறப்புறுப்பு மண்டலத்தை மட்டிலும் சார்ந்ததன்று: அஃது உயிரி முழுவதையும் பொறுத்துள்ளது. ஆண்களும் பெண்களும் பல்வேறுபட்ட உடல், உள்ளக் கிளர்ச்சிச் செல்வாக்குட்பட்ட்வர்களாதலின், இவ்வினைகள் யாவும் இந்த ஹார்மோனல் மட்டிலும் ஏற்பட்டன என்று சொல்லுவதற்கில்லை;

இனி, அடுத்துவரும் கடிதங்களில் பெண் இனப்பெருக்க மண்டலத்தைப்பற்றிய செய்திகளைத் தெரிவிப்பேன்.

அன்புள்ள, திருவேங்கடத்தான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/118&oldid=1285134" இலிருந்து மீள்விக்கப்பட்டது