பக்கம்:இல்லற நெறி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 1 is

பெண் உறுப்புகள்

10

அன்பார்ந்த,செந்தில்வேலனுக்கு,

நலன். நலனே விழைகின்றேன் சென்ற கடிதத்தில் பெண் இனப்பெருக்க மண்டலத்தைப்பற்றி எழுதுவதாகக் கூறியிருந்தேன் அல்லவா? அது குறித்து சில கருத்துகளை இந்தக் கடிதத்திலும் அடுத்து எழுதும் சில கடிதங்களிலும் தெரிவிப்பேன்.

இனப்பெருக்கத்தில் பெண்ணின் பங்கு: இனப் பெருக்கச் செயலில் பெண்ணின் பங்கு ஆணின் பங்கைவிட மிகமிகச் சிக்கலானது. குழந்தை பெறுவதில் விந்தணுக்களை உற் பத்தி செய்வதும் அவற்றைப் பெண்ணினிடம் சேர்ப்பது மான செயலுடன் ஆணின் பங்கு முற்றுப் பெறுகின்றது என் பதை நீ நன்கு அறிவாய்; முன்னர் எழுதிய கடிதங்களில் இவற்றைக் கூறியுள்ளேன். உடற்கூறு பற்றிய செயல்களைப் பொறுத்தமட்டிலும் விந்தணுக்களேச் செலுத்துவடன் ஆணின் பங்கு நிறைவுபெறுகின்றது. பெண்ணினிடமும் இப் பால் அணுக்களை88-முட்டைகளே-உண்டாக்கும் செயல் இருக்கத்தான் செய்கின்றது. இத்துடன் அவளது உடலினுள் கரு அல்லது இளஞ்சூல் வளர்ச்சியின் பல்வேறுபடிகள் நடை பெறுகின்றன. அவளுடைய உடலினுள்தான் ஆண் அணுக் களும் பெண் அணுக்களும் சந்தித்து ஒன்று சேர்கின்றன: அவளுடைய உடலினுள்தான் கருவுற்ற முட்டை தங்கி முதிர்ந்த வடிவைப் பெறுகின்றது. குழந்தை பிறந்த பிறகும் அவளுடைய உடலினுள் சுரக்கும் தாய்ப்பாலைக் கொண்டு தான் அவள் குழந்தையின் தொடக்க வாழ்வில் அதனை

88. பால் அணுக்கள்.-Sex cells. - இ-ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/119&oldid=597851" இலிருந்து மீள்விக்கப்பட்டது