பக்கம்:இல்லற நெறி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 13&

கருக் குழல்கள்9ே1: படம்-14ஐ உற்று நோக்கினல், கருப்பையின் மேற்பாகத்தில் பக்கத்திற்கொன்ருக கொம்பு கள் போன்று இரண்டு குழல்கள் இருப்பதைக் காண்பாய். இந்தக் குழல்களின் தன்மையையும் செயலையும் முதன் முதவில் விவரித்துக் கூறியவர் ஃபெலோப்பியஸ்' என்ற உடற் கூற்றியல் அறிஞர்'. ஆகவே, அவர் பெயரால் அவை ஃபெலோப்பியன் குழல்கள் என்று வழங்கப் பெறுகின்றன. இவை முறையே ஒவ்வொன்றும் கிட்டத் தட்ட ஐந்து அங்குல நீளம் உள்ளவை; சிறிய நாண குழல் அளவு உள்ளவை: கருக்குழலின் சுவர்களும் மூன்றடுக்குகளால் ஆனவை. குழலின் உட்புறத்தின் மேற் பரப்பிலிருப்பது சளிச் சவ்வு; இச் சவ்வின் மீது பிசிர் 94 போன்ற உணர்வுப் பகுதி அமைந்து அதற்கு மயிர்ப் பட்டு போன்ற தோற்றத்தை அளிக்கின்றது. இதனை நுண் பெருக் கியின் மூலம் காணலாம். இதன் அடியிலிருப்பது தசையா லான இழையம்; இதற்கு மேற்புறமாக இருக்கும் மெல்லிய மேலுறையே இடுப்புப் பகுதியின் சவ்வினுடன் இணைக்கப் பெற்றுள்ளது. இவற்றின் முடிவுப் பகுதியில் இவை சற்றுப் பருத்துக் குஞ்சம் போன்ற பிரிவுகள் காணப்பெறுகின்றன. சூற்பையில் முட்டை பக்குவமாகியிருக்கும்பொழுது இக் குஞ்சப் பகுதி சூற்பையின் அருகே நெருங்குகின்றது. குற் பையில் உற்பத்தியாகும் பெண் கரு அனுவை (முட்டையை) இந்தக் குஞ்சப் பகுதியும் கருக்குழலில் உற்பத்தியாகும் ஒரு திரவமும் கவர்கின்றன. இப் பெண் கரு அணு கருப்பையை நோக்கிக் கருக்குழலின் பிசிர்போன்ற உறுப்புகளின் உதவி யால் நகர்ந்து வருங்கால் புணர்ச்சியால் வெளியேற்றப்படும் விந்தணுக்களைச் சந்தித்து அவற்றுள் ஒன்ருல் கருவுறுகின் றது: கருவுற்ற அணு கருப்பையில் வந்து தங்குகின்றது.

I 01: &G&Gypåvssit–Fallodian tubes or Oviducts. 102. பெலோப்பியஸ்-Fallopius: 103. உடற்கூற்றியலறிஞர்-Anatomist. 104, u3@ff—Cilia.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/129&oldid=597872" இலிருந்து மீள்விக்கப்பட்டது