பக்கம்:இல்லற நெறி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இல்லற நெறி


சூற்பையிலிருந்து வந்த முட்டை கருப்பையை வந்தடைய எட்டு நாட்களாகின்றன.

சில சமயம் கருவுற்ற முட்டையின் பயணம் தடைப் பட்டு அது கருக்குழலின் சளிச்சவ்வில் புதைந்துவிடுகின்றது. இது கருக்குழல் கருப்பத்தில் 198 முடிகின்றது. கருவுற்ற முட்டை இளஞ்சூலாக வளருங்கால் அது கருக்குழலை உடைத்து குருதிப் பெருக்கினை விளைவித்துப் பெண்ணை மரணத்திற்குள்ளாகிக்விடும். தக்க அறுவைச் சிகிச்சையால் இதனைத் தடுக்க வேண்டும். வெள்ளைபோன்ற நோயினுல் கருக்குழல் புண்ணுகி விட்டால், கருக்குழலின் மெல்லிய துவாரம் அடைபட்டுவிடும். அதல்ை கரு அணு உள்ளே வர முடியாமல் போகின்றது. வெள்ளை நோயினுல் பீடிக்கப் பெற்ற பெண்களில் சிலர் மலடாகிவிடுவதற்கு இதுவே கார ணமாகும்.

சூற்பைகள்: கருக்குழலின் அருகே கருப்பைக்கு இரு புறமும் பக்கத்திற்கொன்ருகக் காணப்பெறுபவையே சூற் பைகளாகும் இவை கிட்டத்தட்ட உரிக்காத வாதுமைக் கொட்டை வடிவத்தைக் கொண்டவை. ஒவ்வொன்றும் ஒன்றரை அங்குல நீளமும், ஒரங்குல அகலமும், அரை அங்குல கனமும் உள்ளவை. ஆணின் விரைகளைப் போலவே இவையும் சில ஹார்மோன்களை உண்டாக்குகின்றன. இந்த ஹார்மோன்கள் பெண்ணின் உடற்செயல்களில் பெரும்பங்கு கொள்ளுகின்றன. ஒரு பெண்ணிடம் கருப்பை, சூற்பைகள், கருக்குழல்கள் முதலியன அமைந்திருப்பதைப் படத்தில் (படம்-15) காண்க. கிராஃபியன் ஃபாலிகிளும் முட்டை யும் வளர்ச்சியுறும் நிலையும், பக்குவப்பட்ட முட்டையும், ஃபாலிகிள் வெடித்து முட்டை கருக்குழலுக்குள் புகும் நிலை யும் படத்தில் காட்டப் பெற்றுள்ளன.

சூற்பைகள் என்பவை ஆணின் விரைகளைப்போன்று பெண்ணிடம் அமைந்த உறுப்புகளாகும். இனப்பெருக்க

105. Gjágpö outh–Extrapregnancy or Etopic

pregnancy:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/130&oldid=1285140" இலிருந்து மீள்விக்கப்பட்டது