பக்கம்:இல்லற நெறி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

ஆடவர்களும், கருக்குழியைப் பற்றியும் அதன் சினைகளாக உள்ள சிறுசிறு உறுப்புகள் பற்றியும் போதிய அறிவு பெருத மகளிரும் நன்முறையில் தாம்பத்திய உறவுகொள்ள முடிவ தில்லை. இவர்கள் உறுப்புகளின் நிலை ைஉணராது, அவற் றின் வழி துறை தெரியாது உழன்று, இன்பத்தை இழந்து நிற்பதுடன் நெறி தவறிய வாழ்விஞ்ல் வேறு பல நோய்களே யும் தேடிப் பாழ்படுகின்றன்ர். இப்போது மேட்ைடு அறிஞர்கள் உயிர் நிலைகளின் நுட்பங்களைச் செவ்வனே ஆய்ந்து அவற்றின் இயல்புகளை எவரும் எளிதில் உணரும் முறையில் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளனர். அந்த துட்பங்களையெல்லாம் மனத்திற்கொண்டு பல அறிவியல் கருத்துகள் இந்நூலில் விளக்கப்பெற்றுள்ளன. உயிர் நிை யாகவுள்ள உறுப்புகளைப் போற்றிப் புரத்தலும், நெறி யுடன் ஆளுதலும் மணமக்களின் முதலாய கடனுகும்.

'நமது நாட்டுப் பழைமை என்னும் 'உயிர் இக்கால மேல்நாட்டுப் புதுமை என்னும் உடல் தாங்கும் முறையில் தாய்மொழியில் நூல் பல யாத்தல் காலத்துக்கு இயைந்த தொண்டாகும்: அத்தகைய நூல்களின் இன்றியமையாமை யைச் சொல்லவும் வேண்டுமோ” என்ற திரு. வி. க. அவர் களின் குறிப்பே' என்னே இந்நூலை எழுதத் துாண்டியது. அப்பெரியாரின் ஆசியால் நூலும் ஒரளவு நன்முறையில் அமைந்தது என்று கருதுகின்றேன். என்னுடைய உயர்நிலைப் பள்ளி வாழ்க்கை முதற்கொண்டே அப்பேரறிஞர்பால் கொண்டுள்ள பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் அறிகுறி யாக இந்நூலை அவர்களின் திருவடிகட்குப் படைக்கின்றேன். அவர்கள் காட்டிய பாதையில் செல்லும் இந்நூல் அமரத்துவம் பெற்றுள்ள அவர்களது ஆசியால் தமிழ் கூறு நல்லுலகில் பெருமிதத்துடன் உல.ாப்போந்து பல மண மக்களின் வாழ்வினை வளமாக்கும் என்பது என் திடமான நம்பிக்கை.

3 பொருள் விளக்கத்திற்குப் படங்கள் பெருந்துணைபுரியும் என்பது கல்வியறிஞர்கள் கண்ட துணிபு. இந்த நூலை 55 படங்கள் அணி செய்கின்றன. இப்படங்களை எழுதி உதவிய வர் என் அரிய நண்பர் திரு. வே. முனியாண்டி என்பவர்; காரைக்குடி அழகப்பா மாதிரி உயர்நிலைப் பள்ளியில் ஒவிய

3. பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை'

-முன்னுரை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/13&oldid=597873" இலிருந்து மீள்விக்கப்பட்டது