பக்கம்:இல்லற நெறி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 157

னர். இவ்விடத்தில், கன்னிச்சவ்வு கிழியும்பொழுது வலி, அல்லது குருதிக் கசிவு ஏற்படுகின்றதா என்ற ஐயம் இயல் பாகவே உன்னிடம் எழலாம். இவ்வாறு நிகழ்வது கன்னிச் சவ்வின் இழைநயம், கெட்டித்தன்மை', அதன் இருப்பு நிலை , அது கொண்டுள்ள திறப்பின் அளவு ஆகியவற்றைப் பொறுத்தது. கன்னிச்சவ்வு தடித்தும் இருக்கலாம், மெல் வியதாகவும் இருக்கலாம்; அல்லது அது மிருதுவாகவும் இருக்கலாம், நாரியற் பொருளாகவும் இருக்கலாம்; அல்லது சுருங்கி நீளும் தன்மையுடையதாகவும் இருக்கலாம், உறுதி யாகவும் இருக்கலாம். ஆகவே அஃது எளிதாக வலியோ குருதிக் கசிவோ இன்றி விரிதல்கூடும். சில சமயம் அஃது எதற்கும் எதிர்த்து நின்று அறுவைச் சிகிச்சைக்கு உட்பட வும் நேரிடலாம்:

பர்த்தோலின் சுரப்பிகள்: யோனிக் குழலின் நுழைவாயி, லின் அருகில்பக்கத்திற்கொன்றக இருக்கும் இரண்டு சுரப்பி கள் பர்த்தோலின் சுரப்பிகள்' என்றுவழங்கப்பெறுகின்றன. அவைதெளிவான பாகுபோன்ற திரவத்தைச் சுரக்கின்றன; புணர்ச்சித் துரண்டலின்பொழுது இத்திரவத்தின் அளவு அதிகமாக இருக்கும். இச்சுரப்பிகள் தோலுக்கடியில் இருப்ப தால் கண்ணுக்குப்புலனுகா, ஆனால், அவற்றின்சுரப்புநீர்கள் கன்னிச்சவ்விற்கும் சிறிய உதடுகளுக்கும் இடையில் உள்ள பள்ளத்தில் பக்கத்திற்கொன்ருக உள்ள இரண்டு மிகச்சிறிய திறப்புகளின் வழியாக வெளிப்படுகின்றன. இச்சுரப்பு நீர் புணர்ச்சியின்பொழுது ஆண்குறி யோனிக்குழலில் வழுவழுப் பாக இறங்கி இயங்குவதற்கு வழுக்கிடுபொருளாக உதவு கின்றது.

இவ்விடத்தில் ஒரு முக்கிய செய்தி அறியத்தக்கது. வெளிப்புறப் பிறப்புறுப்புகளைச் சுற்றிலுமிருந்து வெளி

161: QāL14-ššárgolo-Consistency 162. QUjiji são—Position I 53. uri šGÆrrestést árguliuoseir-Bartholin’s glands I 64; si påst@ Gum Gei-Lubricant

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/163&oldid=597922" இலிருந்து மீள்விக்கப்பட்டது