பக்கம்:இல்லற நெறி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் 199

தாய் கருவுயிர்ப்பதற்கு முன்னதாகக் குருதி வெளிப்படு வதற்கு வேருெரு காரணமும் உண்டு. பெரும்பாலும் கருப் பையின் மேற்பகுதியில் ஒட்டிக்கொண்டு வளர வேண்டிய நஞ்சு (பார்க்க: படம்-29). சிலசமயம் படத்தில்காட்டியபடி (படம்-30) கருப்பையினது வாயின் அருகிலேயே ஒட்டிக் கொண்டு வளர்வதுண்டு; இதனை முன்னடைப்பு நஞ்சு 54 என்று வழங்குவர். இதில் இரண்டு வகை உண்டு. ஒன்றில் முற்றிலும் கருப்பையின் வாயை நஞ்சு அடைத்திருக்கும்; இன்னெரு வகையில் நஞ்சு கருப்பையின் வாயைச் சிறிது மட்டும் அடைத்திருக்கும். இரண்டையும் படத்தில் காண்க; (படம்-30). பிரசவத்திற்கு முன்பு கருப்பையின் வாய் விரியத் தொடங்கும்பொழுது நஞ்சு பிய்த்துக்கொண்டு குருதி கொட்டத் தொடங்குகின்றது. கருப்பையின் வாயை இஃது அடைத்துக்கொண்டிருப்பதனால் குழந்தை எளி தாக வெளிவர முடியாது. ஆகவே, இது தாய்க்கும் சேய்க் கும் பெருத்த அபாயத்தை விளைவிக்கும்:

ஏழாவது மாதத்திற்குமேல் பென் உறுப்பினின்றும் குருதி வெளிப்பட்டால் தாமதமின்றி மருத்துவரின் உதவி யைப் பெறுதல் வேண்டும். முன்னடைப்பு நஞ்சு முற்றிலும் கருப்பையை அடைத்துக் கொண்டிருப்பின் சிஸேரியன் செக்ஷன்' என்ற முறையால் வயிற்றைக் கிழித்து குழந் தையை வெளியே எடுக்க முடியும். இக்கோளாறுகளைத் தேர்ச்சிமிக்க மருத்துவர்தான் கவனிக்க வேண்டும்.

இனி, அடுத்த கடிதத்தில் கருவுயிர்த்தல் பற்றிய செய்திகளை ஒரளவு விரிவாகத் தெரிவிப்பேன்.

அன்புள்ள, திருவேங்கடத்தான்

54: qpést araw l-Lilj p5$53-Placenta previa

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/205&oldid=597988" இலிருந்து மீள்விக்கப்பட்டது