பக்கம்:இல்லற நெறி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

இல்லற நெறி


ருக்கும் நீர் வெளியேறுகின்றது. பனிக்குடம் உடைந்து குழந்தை வெளிவரும் நிலைவரையுள்ள மூன்று நீலைகளில் இம் முதல்நிலை படத்தில் (படம். 31) விளக்கப்பெற்றுள் ளது: உற்றுநோக்கி உளங்கொள்க, இத்தனைச் செயல்களும் நடைபெறுவதற்கு முதற் பிரசவத்தில் பதினறு மணி நேர மும், அடுத்து நிகழும் பிரசவத்தில் ஆறு மணி நேரமும் ஆகின்றன:

சில சமயம் பனிக்குடம் பிரசவ வேதனை தொடங்கிய வுடனேயோ அல்லது பிரசவ வேதனை தொடங்கும் முன் னரோ உடைந்து விடுவதுண்டு. இப்பொழுது பனிக்குட நீர் முழுவதும் வெளியேறி விடுவதால், அடுத்து நிகழும் குழந் தைப் பிரசவம், உலர்ந்த பிள்ளைப்பேறு என வழங்கப்பெறு கின்றது. பனிக்குடத்தின் விரியச் செய்யும் இந்நிலையில் ஆற் றல் இல்லாது போவதால் பிரசவம் ஒரு சிறிது சிரமமாகப் போவதுடன் பிரசவகாலமும் நீடிக்கின்றது.

இரண்டாம் நிலை: இந்நிலையில் குழந்தை கருப்பையி லிருந்து யோனிக்குழல் வழியாக வெளியே தள்ளப்பெறுகின் றது. இந்நிலையில் சாதரணமாகத் தலை முதலிலும், ஏனைய உடலுறுப்புகள் அடுத்தும் வெளி வருகின்றன. இப் பொழுது பிரசவ வேதனை மிகவும் அதிகமாகவும் கடுமை யாகவும் இருக்கும். குழந்தையை வெளியேற்றும் முயற்சி யில் வயிற்றுத் தசைகளும், நுரையீரல்களின் அடியில் காணப்பெறும் விதானமும் கருப்பையுடன் ஒத்து ஒவ் வொரு வலியின் பொழுதும் சுருங்கி விரிகின்றன; இப் பொழுது கருப்பிணிக்கு முக்கினல் ஆறுதலாக இருப்பது போன்ற உணர்ச்சி ஏற்படும். அதனுல் கருப்பிணி முக்கு வாள். கருப்பையினின்றும் நன்ருக விரிந்துகொண்டுள்ள அதன் வாயின் வழியாக யோனிக்குழலில் குழந்தை ஒவ் வொரும் நோவின்பொழுதும் சிறிது கிறிதாக இறங்கிக்

58. உலர்ந்த பிள்ளைப்பேறு'-Dry labour; 59. நுரையீரல்கள்-Lungs. 60. sagrarih –Diaphram.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/210&oldid=1285180" இலிருந்து மீள்விக்கப்பட்டது