பக்கம்:இல்லற நெறி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் 208

கொண்டு வரும். அதற்கேற்றவாறு யோனிக் குழலும் அகன்று விரிந்து கொடுக்கும்.

கீழே இறங்கி வரும்குழந்தையின் தலையைச் சுற்றியுள்ள பிறப்புறுப்புகளின் தசைகள் நெகிழ்ந்து இடங் கொடுக் கின்றன. இச்சமயம் வலி மேலும் வேகமாகவும் கடுமை யாகவும் தொடர்ச்சியாகவும் உண்டாகும். கீழே இறங்கி வருங்கால் குழந்தையின் உதய பாகம் நன்ருக அமுக்கு வதனால் இரண்டு தொடைகள், ஆசனவாய் பெண் உறுப்பு இவைகளுக்கு இடையேயுள்ள பக்கம் உப்பிக் கொண்டு கிழிந்து விடும்போல் தோற்றமளிக்கும். குழந்தை யோனி வாயை அடைந்ததும் கருவுயிர்க்கும் பெண்ணுக்கு மலங்கழிக்க வேண்டுவது போன்ற ஓர் உணர்ச்சி ஏற்படும்; குழந்தையின் உதய பாகம் மலக்குடலை அமுக்குவதனல் இந்த உணர்ச்சி தோன்றுகின்றது. யோனியின் வாயினின்றும் குழந்தையின் தலை வெளிப்பட்டதும். கருப்பிணி நோவு தாங்க முடியாது சில சமயம் வாய்விட்டுக் கூச்சலிடுவதும் உண்டு. முதலில் குழந்தையின் முகம் தாயின் ஆசனத்தை நோக்கியும் தலையின் பின்பாகம் மேல் நோக்கியும் இருக்கும். கழுத்து வரை வெளி வந்ததும் குழந்தை தானுகவே இடப் புறமோ வலப்புறமோ தலையைச் சிறிதளவு திருப்பிக் கொள்ளும். இதைத்தான் மூத்தோர்கள் தலை திரும்பு கின்றது” என்பர். குழந்தையின் தலை வெளியே வருங்கால் அதனுடைய முக்கு, வாய் இவற்றினின்றும் கோழை சிறி தளவு கசிவதுண்டு. தலை வந்து திரும்பியதும் தோள்கள், உடல், ஆசனம், கால்கள் என ஒவ்வொரு உறுப்பும் வேகமாக வெளியே நழுவித் தாமாகவே வந்துவிடுகின்றன. இச்செயல் நடைபெற முதற்பிரசவத்தில் இரண்டு மணி நேரமும் அடுத்தடுத்து நிகமும் பிரசவங்களில் அரை மணி நேரமும ஆகலாம். குழந்தை முற்றிலும் வெளிவந்த பிறகும் அது தாயுடன் கொப்பூழ்க் கொடிமூலம் ஒட்டிக் கொண்டிருக்கும்; இக்கொடி தாயின் நஞ்சுக் கொடியுடன்

61. ஆசனவாய்-Aents.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/211&oldid=598002" இலிருந்து மீள்விக்கப்பட்டது