பக்கம்:இல்லற நெறி.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் 337

பிரசவசத்தில் இரண்டும் குறுக்காகக் கருப்பையில் படுத்துக் கிடக்கலாம் என்றும் மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுள் 5Ifgörrf •

மேற்கூறிய ஆறு நிலைகளிலும் முதல் மூன்று நிலைகளிலு முள்ள பிரசவம் எளிதாக அமைந்துவிடும்: அடுத்து மூன்று நிலைகளிலுமுள்ள பிரசவத்தின்பொழுது பிரசவம் சிரமாமாகி விடக் கூடும்; பொதுவாக இரட்டைக் குழந்தைகள் என்று தெரிந்ததும் மருத்துவர் உதவியுடன் பிரசவத்தை நடத்து வது நலம். பிரசவம் தாமதப்பட்டால் அவர் சந்தர்ப்பத் திற்கேற்படி குழந்தையைத் திருப்பி எடுத்தோ ஆயுதத்தைக் கையாண்டோ பிரசவத்தைத் துரிதமாக நடத்தி விடுவார்.

சாதாரணமாகத் தனியாகப் பிறக்கும் குழந்தைகளே விட இரட்டைக் குழவிகள் சிறியனவாக இருப்பதல்ை பிரச வம் எளிதாக நடைபெற்று விடுகின்றது எடையிலும் இரு குழவிகள் வேறுபடுகின்றன. ஒன்று மிகவும் சிறியதாகவும் மற்ருென்று எடையில் அதிகமாகவும் இருக்கலாம். ஆனல், இரு குழவிகளின் மொத்த எடை சாதாரணமாக ஒற்றை யாகப் பிறக்கும் ஒரு குழந்தையின் எடையைவிட அதிக மாகவே உள்ளது.

சில குடும்பங்களில் பலருக்கு இரட்டைக் குழவிகள் பிறக்கின்றன. இது மரபு வழியாக இறங்கும் தன்மை என்ப தற்கு அதிகச் சான்றுகள் உள்ளன. மேலும் சில பெண் களிடம் ஒவ்வொரு கருப்பதிலும் பல குழந்தைகள் பிறக் கின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு பெண் உறவு முறையி லில்லாத மூன்று ஆடவர்களை ஒருவர் பின் ஒருவராக மணந்தாள். ஒருவரிடம் இரட்டைப் பிள்ளைகளும், மற் ருெருவரிடம் மூன்றுபிள்ளைகளும், இன்னொருவரிடம் நான்கு பிள்ளைகளும் பிறந்தன; பதினைந்து கருப்பங்களில் அவள் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். இந்தப் பெண்ணிடம் அமைந்த குழந்தைப் பேற்றின் வளம் அவளு டைய கணவன்மாரைப் பொறுத்தது என்பது வெளிப் படை, மற்றும் ஓர் எடுத்துக்காட்டு; ஒர் இரஷ்ய உழவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/243&oldid=598074" இலிருந்து மீள்விக்கப்பட்டது