பக்கம்:இல்லற நெறி.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

இல்லற நெறி


யம்ஸ்கே என்ற பிரசவ மருத்துவர் சிஸேரியன் அறுவை சிகிச் சைகளை நடத்தியபொழுதெல்லாம் சூற்பைகளை நன்கு உற்று நோக்கி முட்டை வரும் சூற்பையின் பக்கத்திற்கும் குழந்தையின் பாலுக்கும் யாதொரு தொடர்பும் இல்ல்ை என்று முடிவு கூறியுள்ளார். கருப் பகாலத்திலும் குழந்தை யின்பாலினை அறுதியி டக் கூடிய யாதொரு கூறும் இல்லை என்பதையும் நீ அறிதல் வேண்டும். முட்டையும் விந்தனும் சேரும் பொழுதே இஃது அறுதியிடப்பெற்று விடுகின்றது.

பிறக்கும் குழவிகளின் பாலினைக் கட்டுப்படுத்தக்கூடிய முறைகளைப் பன்னெடுங் காலமாக ஆாாய்ந்து வருகின்றனர். சுமார் 150 யாண்டுகட்கு முன்னர் ட்ரெலின்கோர்ட்" என்ற அறிவியலறிஞர் குழந்தையின் பாலினை அறுதியிடும் கார ணங்களையும் அவற்றினைக் கட்டுப்படுத்தும் முறைகளையும் பற்றிய 262 கருதுகோள்களை ஒன்று திரட்டி ஒவ் வொன்ருக அவை தவறு என்பதை மெய்பித்துத் தானே ஒரு கொள்கையை நிறுவினர். நாளடைவில் அதுவும் தவறு என்று மெய்ப்பிக்கப் பெற்றுவிட்டது. சுமார் இருபது யாண்டுகட்கு முன்னர் கார நிலையிலுள்ள ஊடுபொருள்: ஆண் உற்பத்திக்குத் துணை செய்கின்றதாகவும், அமில நிலை யிலுள்ள ஊடு பொருள் பெண் உற்பத்திக்குத் துணை செய் கின்றதாகவும் கருதினர். ஆகவே, அவர் ஆண் குழந்தை வேண்டுவோருக்கு இணைவிழைச்சுக்குச் சற்று முன்னதாக சோடியம் பைகார்பனேட்டுக் கரைசலை யோனிக் குழலில் பயன்படுத்த வேண்டும் என்றும், பெண் குழவியை நாடு வோர் லாக்டிக அமிலக் கரைசலைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கிபாரிசு செய்தார். இது வரையிலும் அக்கொள்கை யில் உண்மையிருப்பதாக உறுதி செய்யப்பெறவில்லை.

84. sŵL”.iñu”.gg s@âŷ6ŵućbeŵ-Whitridge Wllliams: 85. ட்ரெலின் கோர்ட்-Drelincourt. 86. &G&Gesmer–Hypothesis. 37, osaG Glitreysir-Medium.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/246&oldid=1285198" இலிருந்து மீள்விக்கப்பட்டது