பக்கம்:இல்லற நெறி.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பக் கட்டுப்பாடு 勝77

மருத்துவர்கள் கருதுகின்றனர். விளம்பரம் செய்யப்பெறும் வணிகப் பொருள்கள் சில சமயம் தீங்கு பயக்கலாம் என்பது அவர்களின் கருத்தாகும்.

புணர்ச்சிக்குப் பிறகு எவ்வளவு நேரத்திற்குள் "டுஷ்' செய்து கொள்ள வேண்டும் என்று நீ வினவலாம். விந்தணுக் கள் எட்டு நிமிடங்களில் ஒர் அங்குல தூரம் நகர்ந்து செல்லுகின்றன என்று ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பதை நினைவு கூர்வாயாக புணர்ச்சியின் பொழுது விந்தனுக்கள் கருப்பையினுள் நுழையாவிடினும் ஒரு சில நிமிட நேரத்தில் அவை நுழைதல் கூடும். ஆகவே புணர்ச்சி முற்றுப் பெற்ற ஐந்து நிமிட நேரத்திற்குள் டுஷ்” செய்துகொள்ள வேண்டும் படுத்த நிலையிலும் உட்கார்ந்த நிலையிலும் இம் முறையை மேற் கொள்ளலாம் என்ருலும், உட்கார்ந்த நிலையிலேயே செய்து கொள்ளுதல் மிகவும் நன்று. நீருள்ள பையைச் சற்று உயரத்தில் (நாம் நிற்கும் அளவு உயரத்தில்) வைத்து விட்டால் அது தேவையான அளவு நீர் அமுக்கத் தைத் தருகின்றது. குழலின் மூக்கை: யோனிக்குழலினுள் சுமார் மூன்று அங்குல ஆழத்திற்குச் செருகிக்கொண்டு நீரைச் செலுத்த வேண்டும். நீர் பெண் உறுப்பினுள் பாய்ந்து கொண்டிருக்கும் பொழுது பெண், யோனியின் வெளிப்புறச் சுவர்களைச் சுருக்கிக் கொடுத்துக் கொண்டி ருக்க வேண்டும்; பெண் உறுப்பின் உதடுகளைத் தன்னுடைய விரல்களால் அமுக்கியும் தளர்த்தியும் பிசைந்து கொண்டே யிருந்தால், யோனிக்குழல் நன்ருக விரிந்து நீர் தன்முகப் பாய்ந்து வெளியேறும்; உட்புறமும் நன்ருகக் கழுவப் பெறும்.

டுஷ்' செய்வதற்கென இரண்டு வகையான கருவி யமைப்புகள் கிடைக்கின்றன. மேற்குறிப்பிட்ட இரப்பர்ப் பையையும் குழாய் மூக்கையும் கொண்ட அமைப்பு ஒன்று: மற்ருென்று, பீச்சாங்குழல் அமைப்பினைக் கொண்ட இரப் பர்க் குமிழாகும். இரண்டிலும் பயன்படுத்தப் பெறும்

58. குழவின் மூக்கு-Nozzie

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/283&oldid=598165" இலிருந்து மீள்விக்கப்பட்டது