பக்கம்:இல்லற நெறி.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பக் கட்டுப்பாடு 葛岛置

உண்டிாக்குகின்றன. இந்துரை வேதியியல் கருத்தடைக் கருவி போலவும் பொறி நுட்பக் கருத்தடைக் கருவி போல வும் அமைகின்றது. மாத்திரைகள் கரைவதற்குச் சிறிதளவு ஈரம் தேவை; சாதாரணமாக யோனிக் குழவிலுள்ள ஈரம் இதற்குப் போதாது. ஆதலால், செருகப்பட்ட மாத்திரை அரைமணி நேரம் கழிந்தபிறகும் கரை பாதிருக்கின்றது. இதல்ை இது புணர்ச்சிக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னர் நீரில் நனைத்துச் செருகப் பெறுகின்றது. சில சமயம் இம் மாத்திரை கரைந்து நுரையினே உண்டாக்கினுலும் அது விரைவில் காய்ந்து விடுகின்றது; அதனுல் யாதொரு பயனு மின்றிப் போகின்றது: பவுடர்களும் சில சமயம் கரையத் தவறுகின்றன; தவிரவும், அவை விரைவில் யோனிக்குழலின் சுவர்களில் ஒட்டிக் காய்ந்து அசெளகர்த்தை உண்டாக்கு கின்றன:

வேதியியற் கருத்தடைப் பொருள்களில் பாகுப் பொருளும் பசைப் பொருளும் சிறந்தவை. அவை ஏற்கெனவே அரை திடப் பொருளாகவோ பாகு நிலையிலோ, அல்லது பசை நிலையிலோ இருப்பதால், உருக வேண்டிய அவசியமோ கரையவேண்டிய நிலேயோ அவற்றிற்கு இல்லை. தவிரவும், அவை யோனிக் குழலிலும் கருப்பையின் வாயிலிலும் எளிதாகப் பரவுகின்றன. பெரும் பாலும் அவை பிரத்தியேகமான மூக்கினேக் கொண்ட எளி தில் நசுங்கக் கூடிய குழல்களில் அடைக் கப்பெற்றிருக்கும். மூக்கினை யோனிக்குழலில் செருகிக் குழலை அழுத்தினுல், அல்லது குழலின் அடியிலுள்ள சாவியைத் திருகினுல் பாகுப் பொருளின் ஒரு பகுதி யோனிக் குழலில் செலுத்தப்பெறும். ஒரு குறிப்பிட்ட அளவு பாகுப்பொருளை யோனிக் குழலி னுள் செலுத்தக்கூடிய பிரத்தியேகமான குழல்களும் (Appli cators) உள்ளன. இன்று தயாரிக்கப்பெறும் பாகுப்பொரு ளோ அல்லது பசைப் பொருளோ முற்றிலும் நம்பக் கூடிய தாக இல்லை. ஆயினும், நாள்தோறும் மிகச் சிறந்த பொருள் களை உற்பத்தி செய்துகொண்டேயுள்ளனர். மேலும் பாகுப் பொருள்கள் சிலசமயம் அதிகமாக வழுக்கிடு நிலையை உண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/287&oldid=598173" இலிருந்து மீள்விக்கப்பட்டது