பக்கம்:இல்லற நெறி.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

இல்லற நெறி


டாக்குவதாலும் யோனிக் குழலினின்றும் ஒழுகுவதாலும் அவைகவினுடன் பயன்படுத்துவதற்குத் தடையாக உள்ளன!

அண்மையில் 'துரைப் பவுடர்' என்ற ஒருவகை வேதி யியல் கருத்தடைப் பொருள் தயாரிக்கப்பெற்றுள்ளது. இந் தப் பவுடர் சிறிதளவு கடற்பஞ்சுடன் சேர்த்துப் பயன்படுத் தப் பெறுகின்றது. இந்தப் பவுடரில் உள்ள துரை தரும் பொருள் ஈரத்திலும் உராய்விலும் நுரையினைத்தருகின்றது. முதலில் கடற்பஞ்சு ஈரமாக்கப்பெற்று அதில் சிறிதளவு பவுடர் துரவப்பெறுகின்றது; பிறகு அது விரல்களால் நல்ல நுரை வரும் வரை நன்கு பிசையப்பெறுகின்றது. இந்நிலை யில் அது யோனிக்குழவினுள் செருகப்பெறுகின்றது இந்த நுரை விந்தணுக்களின் இயக்கத்தைத் தடுக்கும் வேதியியல் அரணுசவும் பொறி நுட்ப அரணுகவும் அமைகின்றது. இம் முறை மிகவும் எளிதாகக் கையாளப் பெறலாம்; செலவும் குறைவு. ஆனால், இது முற்றிலும் நம்பத் தகுந்த முறை என் பது இன்னும் உறுதிப்படுத்தப்பெறவில்லை. சிலருக்கு இஃது இழையங்களில் எரிச்சலை விளைவிக்கின்றதாகச் சொல்லப் பெறுகின்றது.

பொதுவாக வேதியியல் கருத்தடை மருந்துகள் தீங் கினை விளைவிப்பதில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட மருந்து மிகத் தீவிரமாக இருந்தாலும், சில பெண்களுக்கு இவை ஒத்துக் கொள்ளாதிருக்கும்பொழுதும், இவை இழையங் கட்கு எரிச்சலைவிளைவிக்கின்றன. ஆகவே, கருத்தடை மருந் துகளாகப் பயன்படுத்தப்பெறும் வேதியியற் பொருள்கள் அதிக அடர்வுள்ளனவாக இருத்தல் ஆகாது. பொதுவாக இன்று தயாரிக்கப்பெற்று விற்கப்பெறும் மருந்துகள் யாவும் நம்பத் தகுந்தவை என்றும், ஏற்கக்கூடியவை என் றும் சொல்வதற்கில்லை. எதிர்காலத்தில் இவை மிகவும்.மேம் பாடு அடையலாம் என்ற நம்பிக்கை இருந்து வருகின்றது;

ممسنیدهایم: این

67. 5 sportiuoyl-ft-Foam powder 68. of L-fog—Concentration

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/288&oldid=1285218" இலிருந்து மீள்விக்கப்பட்டது