பக்கம்:இல்லற நெறி.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பேறு 器霹姆

வத்திலும் சூதக ஒய்வு நடைபெறும் பருவத்திலும் அடிக்கடி நிகழலாம். எனினும், அவை ஒரு பெண்ணின் சுறுசுறுப் பான இனப்பெருக்கப் பருவத்திலும் அடிக்கடி நிகழ்ந்து குறைந்த அளவு கருத்தரிப்பினை விளைவித்தல் கூடும்.

பிறப்புறுப்புகளில் தடைகள்: ஒரு பெண்ணின் முட்டை நன்முறையில் பக்குவப்பட்டாலும் யோனிக்குழலில் செலுத் தப்பெறும் ஆணின்விந்தணுக்கள் மேனுேக்கிச் சென்று முட் டையைச் சந்திப்பதற்குப் பெண்ணின் பிறப்புறுப்புகளில் பல தடைகள் இருந்து அவளே மலடியாக்குகின்றன. இத் தடைகள் யோனிக் குழல், கருப்பையின் வாய், கருக்குழல் கள் ஆகியவற்றில் எங்காவது இருக்கலாம். ஆகவே, கருத் தரியா நிலையிலுள்ள பெண்களிடம் இப்பாதைகள் சரியாக யுள்ளனவா என்பதனையும் அறுதியிடுதல் வேண்டும்.

யோனிக் குழலின் நுழைவாயிலைச் சுற்றியுள்ள தசை கள் இறுகியிருப்பதால் ஆண்குறியை நுழைக்க முடிவதில்லை; இதனுல் விந்துவை யோனிக் குழலினுள் செலுத்த முடிவ தில்லை. இந்நிலையைப் பிறிதொரு சமயம் ஆராய்வேன்: ஆயின், இதுவும் பெண்ணின் கருத்தரியாநிலைக்கு ஒருகாரண மாகும் என்பதை உணர்த்துவதற்காகவே இதனை ஈண்டுக் கூறினேன். திருமணம் நடைபெற்ற நான்காண்டுகட்குப் பின்னர் ஒரு தம்பதிகள் மருத்துவமனைக்கு வந்தனர். மனைவி நான் காண்டுகளில் ஒரு தடவைக்கூடக் கருத்தரிக்க வில்லை; அவளைச் சோதித்ததில் இக்காலத்தில் ஒரு தடவைக் கூட அவளிடம் முழுமையான இணைவிழைச்சு நடைபெற வில்லை என்பது தெரிந்தது. எப்படியெனில், அவளிடம் கன்னிச் சவ்வு அப்படியே கிழியாமல் இருந்தது; இவர்களில் கணவனுடைய ஆண்மையில் யாதொரு குறையும் இல்லை. மனைவியிடம் ஏற்பட்ட அச்சத்தின் விளைவாக அவளது யோனிக் குழவின் நுழைவாயிலேச்சுற்றிலுமுள்ள தசைகளில்

37; so, so soar—Potency

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/325&oldid=598259" இலிருந்து மீள்விக்கப்பட்டது