பக்கம்:இல்லற நெறி.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கம்பேறு 33.9

பெறும் காரணங்கள் யாவும் மிகவும் சிக்கலானவை; இன் னும் தெளிவாக அறியப்பெருதவை: பொதுவாக, கருவுற்ற முட்டையில் குறையிருந்து அது முழு வளர்ச்சி பெறுவதற் கேற்ற உயிர்ச்சக்தி அதனிடம் இல்லாவிட்டால் கரு காலத் திற்கு முன்னதாகவே வெளிப்பட்டு விடுகின்றது. தாயினிட முள்ள சில குறைகள் அல்லது இயல்பிகந்த நிலைகள் இருந்து அவை காலமல்லாக் காலத்தில் கருப்பையைச் சுருங்கச்செய் தாலும் கருப்பை சூலினை வெளிப்படுத்தி விடுகின்றது; எழுபது சதவிகிதத்திற்கு மேற்பட்ட பெண்களிடம் இளஞ் சூவில் உள்ள குறையின் காரணத்தாலேயே முன்னதாகவே குழந்தை பெறுதல் நிகழ்கின்றது. முட்டையிலோ அல்லது விந்தனுக்களிலோ உள்ள இயல்பிகந்த தன்மையாலோ அல்லது கருவுற்ற முட்டையின் தொடக்கக்கால வளர்ச்சி யுடன் தொடர்புள்ள கூறுகளின் காரணமாகவோ இளஞ் சூலில் குறை ஏற்படுகின்றது. இத்தகைய சந்தர்ப்பங்களில் இளஞ்சூலின் வளர்ச்சி தொடர்ந்து நடைபெற முடிவதில்லை. ஒரு குறையான குழவி பிறப்பதற்குப் பதிலாக, காலத்திற்கு முன் இளஞ்சூல் வெளிப்பட்டு விடுகின்றது.

காலத்திற்கு முன் இளஞ்சூல் வெளிப்படுவதற்குத் தாயி னிடமுள்ள கில கூறுகளும் காரணங்களாக அமைகின்றன. கருப்பையினுள்ளும் அதைச் சுற்றிலும் வளர்ச்சிகள் ஏற்படு தல், கருப்பை இடம்பெயர்தல், சுரப்பிகளில் இல தொந்த ரவுகள் உண்டாதல், விட்டமின் குறைவுகள், தொற்றுக்கள் போன்றவைகள் இவ்வாறு ஏற்படுவதற்குக் காரணங் களாகும். சிலரிடம் உள்ளக்கிளர்ச்சிக் கோளாறுகளும் இதற்குப் பொறுப்பாக அமைகின்றன: தாயினிடமும் வள ரும் கிசுவினிடமும் உள்ள குருதியின் பொருந்தாநிலைகளும் கருப்பத்தின் தொடக்கக் காலத்திலேயே இளஞ்சூல் மரிப்ப தற்குக் காரணங்களாகின்றன என்பதற்குச் சான்றுகள் உள் ளன; காலத்திற்குமுன் குழந்தை வெளிப்படுதல் 75 சதவிகி தம் நான்காவது மாதத்திற்கு முன்னரே நடைபெறுகின்றது.

71. இவஞ்சூல்-Embry)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/345&oldid=598301" இலிருந்து மீள்விக்கப்பட்டது