பக்கம்:இல்லற நெறி.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பேறு $47

சிதைவு செய்வதைவிட கருத்தடை செய்வது சிறந்தது என்ற கருத்தையும் பரப்பினர். இறுதியாக சோவியத் அரசு 1936 இல் மருத்துவக்காரணம்பற்றியும், கருச்சிதைவால் ஏற்படும் சிக்கல்பற்றியும், மக்கள் பெருக்கம் வேண்டும் என்ற கார ணம்பற்றியும் கருச்சிதைவு செய்தல் குற்றம் என்பதாகசி சட்டம் இயற்றியது. இன்று அந்நாட்டில் கருப்பிணியின் உயிருக்கோ அல்லது உடல் நலத்திற்கோ ஆபத்து ஏற்படும் என்று உறுதிப்பட்டாலொழிய கருச்சிதைவினை ஒருவரும் மேற்கொள்ளலாகாது என்ற நிலைமை இருந்து வருகின்றது.

ஸ்கான்டினேவிய நாடுகள் கருச்சிதைவுப் பிரச்சினையை முன்னேற்றமுள்ள சமூக, மருத்துவ முறைகளில் அணுகித் தீர்க்க முயன்று வருகின்றன. எடுத்துக்காட்டாக, ஸ்வீடன் நாட்டில் பல்வேறு ஆலோசனைக் கழகங்கள் நிறுவப் பெற்றுள்ளன. ஒவ்வொரு கழகத்திலும் ஒரு மருத்துவரும் ஒரு சமுகத் தொண்டரும் இருந்துகொண்டு கருத்தடிைக் காக வரும் பெண்களைக் கவனிக்கின்றனர். அங்கு வரும் ஒவ்வொரு பெண்ணைத் தனித்தனியாகக் கவனித்து அவளு டிையசொந்தப் பிரச்சினையையும் குடும்பப்பிரச்சினைகளையும் பொருத்தப்பாடுறச் செய்து கருப்பத்தைச் சிதைக்கா திருக்கவே துணை செய்கின்றனர். தேவையானவர்கட்கு உடனே பொருளாதார உதவியும் செய்யப்பெறுகின்றது. அதே சமயத்தில் கருச்சிதைவுசெய்வதால் நேரிடும் கேடுகளை யும் ஆபத்துக்களையும் எடுத்துக் காட்டிக் கருத்தடை செய்யா திருக்க ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். ஒரு சில பெண் கள் கட்டாயம் கருச்சிதைவு செய்தேயாக வேண்டும் என்று உறுதியுடனிருந்தால் அவர்களைப் பிரத்தியேகமான ஒரு மருத்துவக் கழகத்தின் முடிவுக்கு அனுப்புகின்றனர். கில சமூக நிலைமைகளாலும் வேறு காரணங்களாலும் கருச் சிதைவு சிலரிடம் அனுமதிக்கப்பெறுகின்றது. ஒவ்வொருவரு டைய நிலைமைகளையும் தனித்தனியே ஆராய்ந்து சட்டப்படி

80. 9,3ameårá spañéséh—Consultation councils.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/353&oldid=598319" இலிருந்து மீள்விக்கப்பட்டது