பக்கம்:இல்லற நெறி.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணக் கை 573

தாமே அவளே தமியர் கான காமப் புணர்ச்சி இருவயின் ஒத்தல்"*8

என்று நூற்பாவும் செய்துள்ளார். இதற்கு உரையாசிரியர் தரும் உரையை நன்கு படித்து உணர்த்தால் "இணைவிழைச் கின் உண்மைக் கருத்து தெளிவாகும்:

ஒருவருடைய தேவைகளையும் பிறவற்றையும் இன் ஞெருவர் நன்கு புரிந்து கொண்டு மேற்கொள்ளும் இணே விழைச்சே பேரின்பத்தை அளிக்கும். பெரும்பாலும் கண வன் தன்னுடைய மனைவியின் விருப்பங்களும் துலங்கல் களும் தன்னுடையவற்றினும் வேறுபடக்கூடும் என்பதை யும், அவை நல்ல முறையில் வெளிப்பட வேண்டுமாயின், தான் மிக நுட்பமாகவும் மென்மையாகவும் அவளை அணுக வேண்டும் என்பதையும் அறிவதில்லை. அங்ஙனமே, மனைவி யும் கணவனுடைய துலங்கல்களையோ அன்றித் தேவை களையே அறியாவிடில், அவளும் பாலுறவுத் தழுவலில் ஒத் துழைத்து நன்முறையில் பங்கு பெறுதல் இயலாது: திருவள்ளுவரின் காமத்துப்பா ைஇருவரும் நன்கு படித்து உளங் கொண்டால் அவர் கூறியுள்ள 'மலரினும் மெல்லியது காமம்’49 என்பதன் உண்மைக் கருத்து நன்கு புலஞகும்: "காதலர், கருத்தொருமித்தாதரவு பட்டிதே இன்பம் என்ற பொன்மொழியையும் எண்ணி ஒர்க.

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

48. இறையனர் கனவியல்-நூற்பா-2. 49; குறள்-18893

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/379&oldid=598375" இலிருந்து மீள்விக்கப்பட்டது