பக்கம்:இல்லற நெறி.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணக் கலை 3የ

யாகும் என்பது தெரியவரும். தனியாக இனப்பெருக்க ஊக் கம் என்று ஒன்று இருப்பதாகப் பேசுவதுஉயிரியல் உண்மைக் குப் புறம்பானது. இனப்பெருக்கத்திற்காக மட்டிலும் ஒரு பெண்ணின் பால்வேட்கை துரன்டப் பெறுவதில்;ை இணை விழைச்சினுல் பெறும் மனநிறைவுக்காகவே அது மேற்கொள் ளப் பெறுகின்றது; அதனுல் இனப் பெருக்கமும் உண்டாக லாம்; அல்லது உண்டாகின்றது. உண்மையாக இனப் பெருக்கத்திற்காக மட்டிலும் இணைவிழைச்சு மேற் கொள்ளப் பெற்ருல், இனப்பெருக்கத்திற்குப் பிறகு பால் விருப்பம் தனிந்து போக வேண்டுமெருே? அங்ங்ணம் தணிந்து போகவில்லையே. ஆயினும், உண்மையில் கருப்ப காலத் தொடக்க மாதங்களில் இதற்கு நேர்மாருன நிை இருப்பதைக் காணலாம்; எனினும், எதிர்காலத்தில் ஏற் படப் போகும் தாய்மை நிலை பெண்ணின் பால்வாழ்க்கையில் ஒரளவு பங்கு பெறத்தான் செய்கின்றது; அஃது ஒரு குறிப்பிட்ட முறையில் அவளுடைய பாலுந்தலின் இயல் பையும் உறைப்பையும் பாதிக்கத்தான் செய்கின்றது.

பெண்ணின் காம உணர்ச்சி: இனி, ஆண் பெண் பாலுளக் கத்தைப் பற்றிய ஒரு முக்கியமான கருத்தினை ஆராய்வோம். பெண்ணின் காம உணர்ச்சியைப் பற்றி நீண்ட நாட்களாகக் கருத்து மாறுபாடு இருந்து வருகின்றது. நீண்ட கால மாகவே பால்விருப்பம் என்பது ஆணின் முதல் நிலை அல்லது முழுமையான பண்பு என்றும், பெண்ணிற்கு இந்த உணர்ச்சியே இல்லையென்றும் மிகத் தீவிரமாகக் கருதப் பெற்று வந்தது. காமக்கலையின் கைதேர்ந்த நிபுணரான ஆக்டான்' என்ற ஆங்கில மருத்துவர் கிங்டத்தட்ட நூருண்டுகட்கு முன்னர், 'பெரும்பாலான பெண்கள் காம உணர்ச்சியால் தொல்லைப் படாதிருப்பது சமூகத்தின் நற்

5rr

荔器。 பாலுந்தல்-Libido. 53. 43-fro–Acton,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/381&oldid=598381" இலிருந்து மீள்விக்கப்பட்டது