பக்கம்:இல்லற நெறி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணப்பொருத்தம் 岛岳

புணர்ச்சி போன்ற பறவையினங்கள் கலவி புரிதலைக் காணுங் காலும் இளைஞர்களின் மனத்தில் ஏதோ ஒர் உணர்ச்சி கிளர்ந்தெழுந்து ஆண்குறி விரைத்தல் போன்ற செயல் நேரிடலாம். ஆகவே, சாதாரணமாக ஒர் ஆடவன் கலவி புரியும் தன் ஆற்றலை ஒரளவு அறுதியிட முடியும். சில சமயம் ஆடவன் தன்னுடைய கலவி புரியும் ஆற்றலைப்பற்றியே ஐயுருதிருந்து திருமணத்திற்குப்பிறகு எதிர்பாராத சங்கடங் களை அநுபவிக்க நேரிடுவதுண்டு. இத்தகைய ஒரு நிகழ்ச்சி சென்னையில் செல்வந்தர் ஒருவர் வீட்டில் ஏற்பட்டதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். முதற் கலவியின் போதுதான் அவ்வாடவனுக்குக் குறியே இல்லாதது தெரிந்ததாம்! பிறகு அவனது பெற்ருேர் அவனை அமெரிக்காவிற்கு அனுப்பி அறுவைமுறை சிகிச்சை மூலம் சரிப்படுத்தமுயன்றும் அதில் வெற்றியே இல்லை என்பதாகச் சொல்லப்படுகின்றது. ஆடவன் பெண்ணுதலும், பெண் ஆணுதலும் போன்ற வியத்தகு திடீர் மாற்றங்களைக் காணும் நாம் இத்தகைய உடற்குறைக்கு அறிவியறிஞர்கள் கழுவாய் காணுதிருப்பது வியப்பாகவே உள்ளது!

கலவி புரியும் ஆற்றல் ஒருவரிடம் நன்முறையில் அமைந் திருந்தால், அவரிடம் இனப்பெருக்கத் திறனும் இருத்தல் வேண்டும் என்ற நியதி இல்லை. கலவி புரியும் ஆற்றல் வேறு; கருவுறச் செய்யும் ஆற்றல்? வேறு. ஓர் ஆடவன் கலவி புரி யும் ஆற்றலுடன் இருக்கலாம்; ஆனால், கருவுறச் செய்யும் ஆற்றல் அவனிடம் இல்லாதிருக்கலாம்; அங்ங்ணமே, கலவி புரியும் ஆற்றலே இல்லாதவனிடம் கருவுறச் செய்யும் ஆற் றல் நிறைந்திருக்கவும் இடமுண்டு. இனப்பெருக்கம்பற்றிய பிரச்சினைகளை ஆராயுங்கால் இதனை நன்கு விளக்குவேன். "இனப் பெருக்கப் பொருத்தம் என்பது உடல் நலமுள்ள குழவிகளைப் பெறுவது. அஃதாவது, மணமக்களிடம் உறுதி யற்ற தன்மை அல்லது நோய் அமைந்திருந்தால் அஃது

31. கருவுறச் செய்யும் ஆற்றல்-Fertility.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/41&oldid=598446" இலிருந்து மீள்விக்கப்பட்டது