பக்கம்:இல்லற நெறி.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404

இல்லற நெறி


கொண்டிருப்பதற்குப் பதிலாகச் சில சமயம் மனைவியின் கொங்கைகளைச் சற்று மெதுவாகப் பிடித்துப் பிசைந்து கொண்டும் இருப்பதுண்டு.

பெரும்பாலான தம்பதிசள் முதலில் அதுபவமில்லாத காரணத்தால் புணர்ச்சியை முற்ற முடியக் கொண்டு செலுத்த முடியாமல் திண்டாடுகின்றனர். இதற்குக் கார ணம், பெண் கால்களை நீட்டிப் படுத்துக் கொள்வதால் ஆண் குறியைப் பெண் குறியில் நன்கு செலுத்த முடிவதில்லை. தொடைகளும் கால்களும் நீட்டிய நிலையில் இடுப்பெலும்புக் கட்டும் (பெல்விஸ்) சாய்ந்து கொள்வதால் யோனிக் குழவின் புகுவாய்க் கீழ் நோக்கிய நிலையில் அமைந்து கொள்ளுகின்றது. ஆண் குறி விறைத்த நிலையில் சற்று மேல் நோக்கியிருப்பதால், குறிகள் பொருந்தும் நிலை சரியாக அமைவதில்லை. பெண் முழங்கால்களைச் சற்று மடித்துக் கொண்டு தொடைகளை அகட்டி வைத்துக் கொண்டால் யோனிக் குழலின் வாய் மேல் நோக்கிய நிலையில் சாய்க்கப் பெறுவதுடன், அது சற்றுத் திறந்த நிலையிலும் உள்ளது. இப்பொழுது ஆண் குறியை நுழைப்பது எளிதாகின்றது. பெண் தன்னுடைய இடுப்பிற்கும் ஒரு தலையணையை வைத் துக் கொண்டால் இடுப்பெலும்புக் கட்டு இன்னும் நன்கு சாய்ந்து அமைந்து யோனிக் குழலின் வாயும் முன்னுக்கு வருகின்றது. இதல்ை ஆண் குறியை ஆழமாகச் செலுத்த இயலுவதுடன் குறிகளும் நெருங்கி இணைகின்றன. இதனல் பாலுணர்ச்சி மிகுவதுடன் உச்சநிலை உணர்ச்சி ஏற்படுவதற் கும் எளிதாகின்றது.

ஆண்குறி நன்கு செலுத்தப்பெற்றவுடன் முழங்கால் களைச் சற்று நீட்டித் தொடைகளையும் சற்று நெருக்கிக் கொள்ள வேண்டும். இந்நிலையில் ஆண் குறியை முற்றிலும் செலுத்த முடியாது போயினும், ஆண் குறியும் பெண்ணின் பிறப்புறுப்புகளின் வெளிப் பகுதியும் நன்கு நெருங்கிப் பொருந்துகின்றன. ஆணிடம் சக்தி குறைந்திருக்கும் பொழுதும் இந்நிலையை மேற்கொன்வது பெரிதும் விரும்பத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/410&oldid=1285273" இலிருந்து மீள்விக்கப்பட்டது