பக்கம்:இல்லற நெறி.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-7

பால் பொருத்தக் கேடுகள்

'திருமண உறவு’ என்பது பல்வேறு நற்கூறுகள் அடங்கிய ஒரு வாழ்க்கை ஏற்பாடு. நூற்றைக் கெடுத்த தாம் குறுணி என்பது போல இத்தகைய உறவினைப் பால் பொருத்தக் கேடு குலைத்து விடுகின்றது. சிறந்த முறையில் அமைந்த திருமணங்களையும் ஒரு சில பால் இணக்கமின்மை வகைகள் பெரிதாகப் பாதிக்கின்றன. திருமண வாழ்வில் புக நிற்கும் நம்பியரும் கங்கையரும் பாலுறவில் எதிர் பாராமல் நேரிடக்கூடிய பொருத்தக் கேடுகளையும், அவற் றைச் சமாளிக்குப் முறைகளையும் நன்கு அறிந்திருத்தல் வேண்டும். திருமண இணக்கத்திற்கு வேண்டிய பல்வேறு கூறுகள், பாலுறவினை முற்றுவிப்பத்தில் நேரிடும் சங்க டங்கள், பாலுறவில் மேற்கொள்ள வேண்டிய யுக்தி முறை களை அறியாததால் நேரிடும் கேடுகள், யோனிக் குழல் வலிப்பு பிறப்புறுப்பு வலிப்பு போன்றவை நேரிடுவதற்குக் காரணங்கள், அவற்றைப் போக்கும் முறைகள், பெண் களிடம் பால் விரும்பமின்மை நேரிடக் காரணங்கள், அவற் றைப் போக்கும் சிகிச்சை முறைகள். உச்சநிலை உணர்ச்சித் திறனின்மைக்குரிய காரணங்கள், அவற்றை நிவர்த்தி செய்யும் வழிகள், ஆடவர்களிடம் காணப்பெறும் ஆண் மைக் குறைக்குரிய காரணங்கள், அவற்றை நீக்கும் முறைகள், பால் பொருத்தக் கேட்டிற்கு காரணமான பிறப்புறுப்புகளின் பொருந்தாநிலை, முட்டிமைதுனம், ஒத்த பாலுறவு ஆகியவை பற்றிய செய்திகள்-இப்பகுதி யில் ஐந்து கடிதங்களில் (35-39) ஒரளவு தெளிவாக விளக்கம் பெறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/417&oldid=598463" இலிருந்து மீள்விக்கப்பட்டது