பக்கம்:இல்லற நெறி.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொருத்தக் கேடுகள் & 15

முடியக் கொண்டு செலுத்துவதில் வெற்றியடையாது போக லாம்; அங்ங்ணம் அவர்களுக்கு எதிர்பாராது ஏற்பட்ட சிக்க லான நிலைமையைக்கண்டு அவர்கள் திகைப்படைந்து மன உலைவு அடையலாம். இந்தச் சங்கடங்கன் சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் வரையிலும் தொடர்ந்து நிலைபெற்று தம்பதிகட்கு ஏமாற்றத்தையும் தொல்லையையும் அளிக்க on"Ls).

பல்வேறு காரணங்கள்: மேற்குறிப்பிட்ட சங்கடங்கள் உண்டாவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. புணர்ச்சி பற்றிய பொறிநுட்ப அறியாமை, அதனைச் செயற்படுத்தும் யுக்தி முறையில் தடுமாற்றம், யோனிக்குழல் வாயிலைச் சுற்றி யுள்ள தசைகள் தாமாகச் சுருங்குவதால் ஆண் குறியைச் செலுத்த முடியாத நிலை, இணைவிழைச்சு புரிய முயற்சி செய் யும் போதெல்லாம் விடாது பெண்ணுக்கு வலி ஏற்படுதல், குறியமைப்புகளில் உடற்கூறுபற்றிய இயல்பிகந்த நிலைகள், ஆணிடம் தேவையான அளவு புணரும் திறன் இல்ாைமை போன்ற காரணங்களால் இச்சங்கடங்கள் எழலாம். மருத் துவ இலக்கியத்தில் கண்ட ஒரு குறிப்பிட்ட தம்பதிகள் புணர்ச்சிபற்றிய யுக்திமுறையை அறியாத காரணத்தால் ஒராண்டுவரை புணர்ச்சியை முற்றமுடியக் கொண்டு செலுத்த முடியாமல் திண்டாடினர். தம்பதிகள் ஒருவரோ டொருவர் மிக்க அன்புடையவர்களே; அவர்களுடைய திரு மணமும் இனிதாக நிறைவேறியது. ஆனால், புணர்ச்சிபற்றிய முயற்சிகள் யாவும் பயனளிக்காது போயின. இருவருக் கிடையே பிளவு மனப்பான்மையும் தோன்றத் தொடங்கி யது. அவர்களிருவரும் மருத்துவ யோசனையை நாடினா. மருத்துவர் சோதித்துப் பார்த்ததில் பெண் கன்னி கழியாம லேயே இருந்தாள்! இவளிடம் யாதொரு உடற்குறையும் இல்லை. தம்பதிகளிருவரும் புணர்ச்சியின் யுத்தி முறையையே கிறிதும் அறியாதவர்கள். முயன்று:தவறிக் கற்கும் முறை யிலும் அவர்கள் வெற்றி பெறவில்லை! அவர்கள் புணருங் 6. முயன்று தவறிக் கற்கும் முறை-Trial-and-error

method

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/421&oldid=598473" இலிருந்து மீள்விக்கப்பட்டது