பக்கம்:இல்லற நெறி.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418

இல்லற நெறி


முள்ளவளாவும் ஆவலுள்ளவளாகவும்கூட இருப்பாள். ஆயினும், இணைவிழைச்சுக்கு முயலுங்கால் பிறப்புறுப்புத் தசைகளில் மறிவினை வலிப்பு ஏற்பட்டுக் குறி உட்புக முடியாத நினையினை உண்டாக்கி விடுகின்றது. பலவந்தமாக முயன்ருல் மேலும் அச்சத்தை விளைவித்து நிலைமையைக் கடுமையாக்கி விடுகின்றது. மருத்துவர்கள் இந்நிலையினைப் பிறப்புறுப்பு வலிப்பு என்று வழங்குகின்றனர்.

காரணங்கள் : யோனிக் குழலின் கீழ்ப்பகுதியைச் சுற் றிலுமுள்ள தசைகள் தாமாகவே இறுகிவிடுகின்றன. உட வியல் அல்லது உள்ளக் கிளர்ச்சிக் கூறுகள் இதற்குக் காரணகளாக இருக்கலாம். புணர்ச்சியில் வலியைத் தரும் பிறப்புறுப்பின் சாதாரண நிலையும் இந்நிலையை விளைவித்து விடும். எனினும்: பெரும்பாலோரிடம் பிறப்புறுப்பு ப்ெபு பாலுறவிற்கு எதிரானஒரு நனவிலித் தற்காப்புப் பொறி நுட்பத்தினேயே குறிக்கின்றது அச்சங்கள், கவலை கள், இளயைக் காலத்தில் புகட்டப்பெறும் பாலுறவினைப் பற்றிய உள் தடைகள், விலக்கல்கள் போன்ற ஏதாவது ஒன்று திருமணக் காலத்தில் இவ்வகைத் தசை வலிப்பினை விளைவித்துவிடும்.

பொதுவாகப் பெற்றேர்கள் பால்பற்றிய பொருள் க%ாத்ா திருட்டுத்தனமாகக் கையாள்வதால், பாலுறவு ஒறுமியரின் மனத்தில் பாவம், வெட்கம், குற்றம் போன்ற வற்றின் உணர்ச்சியாகக் கருதப்பெறுகின்றது. மேலும், பெற்றேர்கள் ஒரு பெண்ணைச் சிறு வயதிலிருந்தே அவளது பிறப்புறுப்புகளைத் தொடக் கூடாதென்றும். அப்படித் தொட்டால் கடுமையான தீங்கு விளையும் என்றும் அச்சுறுத்

10. In olaow assàriu-Reflex spasm 1 I. 19pljLJJJJLJ a/«5'rjLj-Genital spasm 12. o-ést Assol–-Inhibition 13: Gooséð-Taboo 14, பால் பற்றிய பொருள்கள்.-Sexual topics

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/424&oldid=1285281" இலிருந்து மீள்விக்கப்பட்டது