பக்கம்:இல்லற நெறி.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொருத்தக் கேடுகள் 44?

உண்மையிலேயே ஒரு பென்னிடம் உச்சநிலை உணர் வின்மை இருக்குமாயின், அதன் விளைவு அப்பென்னின் காம இச்சையின் தீவிரத்தையும் அவள் பால் துலங்கல் எய்தும்பொழுது பெற்ற துடிப்பின் அளவினையும் பொறுத் தது; அவளது பால்துடிப்பு தீவிரமாக இராவிடினும், அவள் சிறிதளவே தூண்டப்பெற்ருலும், உச்சநிலை உணர்ச்சி யின்மை அவளிடம் யாதொரு தீயவிளைவுகளையும் உண்டாக் குதல் இல்லை. ஆனால், அவன் மிக அதிகமாகத் துரண்டப்பெற் ரு ல், உச்சநிலை உணர்ச்சியை எய்தமுடியாதநிலை அவளிடம் மனமுறிவினை விலைவித்துவிடும். இதல்ை அவள் உடல்நிலைக் குலைவையும் உளநிலைக்குலைவையும் அடைய ஏதுவுண்டு. காமக்கிளர்ச்சி ஏற்படுங்கால், பால் உறுப்புகளில் குறிப் பிடத்தக்க உறுப்பு சார்ந்த தெருக்கடியும் பொதுவாக உடல், உள இறுக்கங்களும் விளையும், கலவி முடியுங்கால் உச்சநிலை உணர்ச்சியை எய்தியதும் படிப்படியாக ஒருவித விடுதலையும் அதன் பிறகு மனநிறைவும் இளைப்பாறலும்: நேரிடுகின்றன. எனினும் உச்சநிலை உணர்ச்சி ஏற்படவில்லை யாயின், இந்த விடுதலை யுணர்ச்சி முற்றுப்பெறுவதில்லை. சிறிதுநேரம் பெண்ணும் திருப்தியற்று அமைதியற்ற நிலையி விருப்பாள். அடிக்கடி இத்தகைய நிலை ஒருத்தியிடம் ஏற்பட் டால் அஃது உடல், உளக்குலைவுகளில் கொண்டு செலுத்தும் என்பது ஒருதலை. சிலப்பென்கள் வலிப்பு நோய் போன்ற நரம்புக்கோளாறுகளால் தொல்லைப்படுவதற்கு இந்நிலையும் ஒரு காரணமாகின்றது.

ஒருபெண் உச்சநிலை உணர்ச்சிகை அடையும் திறனுக் கும் அவளது கருத்தரிப்பிற்கும். தொடர்புள்ளதா என்று நீ வினவியிருந்தாய். இத்துறையில் ஆராய்ந்த மருத்துவ நிபுணர்கள் யாதொரு தொடர்பும் இல்லை என்ற முடிவுக்கே

43. உறுப்பு சார்த்த-Local 44. g)&nri iLtir páð—Relaxation 45. augstillų Gibrü–Hysteria 46. 3,053&flulu-Fertility

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/447&oldid=598529" இலிருந்து மீள்விக்கப்பட்டது