பக்கம்:இல்லற நெறி.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442

இல்லற நெறி


வந்துள்ளனர். பெண்ணைப் பொறுத்தவரையில் உச்சநிலை யுணர்ச்சி என்பது உயிரியல் அடிப்படைத் தேவை ன்று. இனப் பெருக்கத்திற்கு இவ்வுணர்ச்சி ஆணிடம் அவசியம் உண்டாத ல் வேண்டும்; இந்த உச்சநிலை உணர்ச்சி ஏற்படும் பொழுதுதான் விந்துப் பாய்மம் பிறப்புறுப்புப் பாதையில் பாய்ச்சப்பெறுகின்றது; விந்துப் பாய்ச்சலின்றி ஆணின் விந்தணுக்கள் பெண்ணின்முட்டையணுவை அடையமுடியா தென்பதை நீ நன்கு அறிவாய், பெண்ணிடம் உச்சநிலை நிலை யுணர்ச்சி இத்தகைய உயிரியல்பற்றிய பங்குபெறுவதில்லை. உச்சநிலையுணர்ச்சியின் பொழுது அவளிடமிருந்து பிரத்தி யேகமான பாய்மம் ஒன்றும் வெளிப்படுவதில்லை; மனித இனத்தில் உச்சநிலை உணர்ச்சியைப் பொறுத்து சூற்பையிலி ருந்து முட்டை வெளிப்படுதல் இல்லை. கலவி முற்றுப்பெறும் நிலையில் பெண்ணின் கருப்பை சுருங்கி விரிகின்றது என்றும் இச்செயலால் அது விந்துப் பாய்மத்தை உறிஞ்சி உள்ளுக்கி ழுக்கின்றது என்றும், ஆகவே, உச்சிநிலையுணர்ச்சி கருத்தரிப் பிற்குத் துணைபுரிகின்றது என்றும் ஒரு சிலர் கருதுகின்றனர். இதுகாறும் இதைபற்றி யாதொருவிதமான சான்றும் கண் டறியப் பெருததால் இது வாதத்திற்குரிய செய்தியாகவே உள்ளது. உச்சநிலை உணர்ச்சியின்றியே பெண்கள் கருவுறு கின்றனர் என்று மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து கண்டுள் வானt,

சமாளிக்கும் முறைகள்: உசிச உணர்ச்சியை அடைய முடியாத பெண்ணின் நிலையை எங்ங்ணம் சமாளிக்கலாம் என்பதைக் கூறுவதுடன் இக்கடிதத்தை முடிப்பேன். பெரும் பாலும் இது பெண்ணிடம் காணப்பெறும் குறையின் இயல் பையும் அதன் காரணத்தையும் பொறுத்தது. கணவனின் கலவி புரியும் முறையிலும் திறனிலும் குறையிருப்பின், அதனை அவன் முதலில் திருத்திக் கொள்ளல் வேண்டும். பெண்ணிடம் பாலைப்பற்றிய தவருண மனப்பான்மை G5ւգ. கொண்டிருந்தால், முதலில் அவளிடமுள்ளஉள்தடைகளை47

عمحمام

47 n-eir56»-ser–Inhibitions

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/448&oldid=1285293" இலிருந்து மீள்விக்கப்பட்டது