பக்கம்:இல்லற நெறி.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448

இல்லற நெறி


னின் பால் தகுதிக ைஅவனிடமுள்ள தீவிரமான பாலுத்தல் : திருப்திகரமான விறைத்தல் திறன், அவ்விறைதிதலைத் தேவையான காலஅளவுவரை நிலைநிறுத்தல் ஆகிய கூறு களைப் பொறுத்துள்ளது. பாலுத்தல் குறைவாக இருப்பி னும், விறைத்தலை மேற்கொள்ள முடியாவிடினும், அல்லது விரைவில் உச்சநிலை உணர்ச்சியை அடையினும், அந்த ஆடவனல் திருப்திகரமான பாலுறவுகளை மேற்கொள்ள இயலாது. திருமண வாழ்க்கையில் அவன் இன்பம்பெற முயல்வது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போலாகும்.

இன்று பெரும்பாலான ஆடவர்கள் தம்முடைய குறையை நன்கு அறிந்துகொள்ளாமலேயே திருமணம் புரிந்துகொள்ளுகின்றனர். திருமணத்திற்குப் பிறகும் சில ரிடம் பால் விருப்பமின்மையோ அல்லது ஆண்மைக் குறைவோ தோன்றலாம். திருமணத்திற்கு முன்னர் சாதா ரணமாக நல்ல பால் அநுபவங்களேக் கொண்டிருந்த ஆட வன் ஒருவன் திருமணத்திற்குப் பிறகு பல்வேறு உள, உள் எக்கிளர்ச்சியற்றிய காரணங்களால் தன் மனைவியுடன் பால் குறைவுடனிருப்பதைக் காணலாம். சில சமயம் ஒர் ஆடவன் தன்னிடம் பால் தகுதி முற்றிலும் இல்லையென்று நன்கு தெரிந்தும் தன்னுடைய இக்குறை திருமணத்தினுல் நிறை வாகி விடும் என்ற நம்பிக்கையுடன் திருமணம் புரிந்து கொள்ளுகின்ருன். இது மிகவும் கொடுமையான செயல் என்பதைச் சொல்லவும் வேண்டாம். ஆண்மைக் குறைவு இருப்பின் அதனைத் திருமணத்திற்கு முன்னரே குணப்படுத் திக்கொள்ள வேண்டுமேயன்றி திருமணம் அதற்கு மருந்து என்று நம்பிக்கை கொள்வது அறிவின்மையாகும். இத் தகைய நிலையில் திருமணத்தில் இறங்குதல் கூடாது; அதிலும் தனக்குத் துணைவியாக வர இருக்கும் பெண் தன் குறையை நன்கு அறிந்து அக்குறை யிருப்பினும் அவனைத் துணை வகை

53. Ligde o–Sexual competence ð4; Lorsys séð—Lfbido

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/454&oldid=1285296" இலிருந்து மீள்விக்கப்பட்டது