பக்கம்:இல்லற நெறி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இல்லற நெறி


பெற்றிருக்கலாம். இக் காரணங்களால் அவரிடம் திருமணப் பொருத்தம் அமையவில்லை என்று கொள்ளுதல் கூடாது: இத்தகைய காரணத்தால் அவருடைய எதிர்கால வாய்ப் புக்கள்: கெட்டுப் போகலாம்; அவருடைய வாழ்நாளையும் குறைக்கலாம். அல்லது அவருடைய பொது மனநிலைகளையும் பாதிக்கலாம்: ஆளுல் இஃது அவரிடம் திருமணத்திற்கே பொருத்தமானவர் அன்று என்ற நிலையினை உண்டாக்காது; இதல்ை அவர் சிறந்த கணவராக முடியாது என்று சொல்லு வதற்குமில்ல்ை, தம்பதிகளுள் ஒருவர் உடல் நிலை பாதிக்கப் பெற்று நடைபெற்ற எண்ணற்ற திருமணங்களில் தம்பதிகள் திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பதை நான் கண்டி ருக்கின்றேன்; பலர் சொல்லக் கேட்டுமிருக்கின்றேன்: என்ற போதிலும், தம்பதிகளுள் ஒருவரிடம் தீராத உடற் குறை இருக்குமாயின், அதை மற்றவர் திருமணத்திற்கு முன்னர் அறிந்து இருவராலும் அந்நிலை சரியென்று ஒப்புக் கொள்ளப்பெறுதல் வேண்டும்: பெற்ருேர்கள் இத்தகைய குறையினே எக்காரணத்தாலும் மறைத்து வைக்கக்கூடாது. திருமணம் உறுதி செய்யப்பெறுங்கால் இதனை எடுத்துக் காட்டி மணமக்களைத் திருப்தி செய்து விடவேண்டும். இத் தகைய குறைகளை முன்னரே எடுத்துக் காட்டாமல் திருமணங்கள் செய்வதால் திருமணத்திற்குப் பிறகு ஒரு வருடைய குறையை மற்றவர் அறிந்தவுடன் பல்வேறு குழப் பங்கள் எழுகின்றன; அவை மண-முறிவிலும் கொண்டு செலுத்துகின்றன:

மணமகளாகப்போகும் ஒரு பெண்ணிடம் இத்தகைய தீராக் குறையிருப்பின் அதை அவசியம் அவளுடைய பெற் ருேர் வெளிப்படுத்த வேண்டும். இத்தகைய குறை அவ ளுடைய பிள்ளைப்பேற்றிற்குத் தடையாக இருந்து, அவள் கருவுயிர்க்குங்கால் அவளுடைய உயிருக்கே ஆபத்து விளை விக்கக்கூடியதாகவும் முடியலாம். எடுத்துக்காட்டாக,பாதிக் கப்பெற்ற இதயத்தையுடைய ஒரு பெண் கருக்கொள்வதால்

43. எதிர்கால வாய்ப்புக்கள்--Prospects:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/46&oldid=1285098" இலிருந்து மீள்விக்கப்பட்டது